ஜெ எப்படி இலவச அரிசி தருவார்? ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தரப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும்ஜெயலலிதா மட்டும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பதுஎந்த வகையில் நியாயம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கேள்விஎழுப்பியுள்ளார்.

சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துஸ்டாலின் பேசுகையில்,

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்துள்ளேன். நான் சென்றஇடமெல்லாம் மக்களிடம் பெரும் எழுச்சியைக் காண முடிந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மக்கள்மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அத்தனையும் தவறாமல் நிறைவேற்றப்படும்.இதுவரை எந்த கட்சியும் இப்படி ஒரு புரட்சிகரமான தேர்தல் அறிக்கையைவெளியிட்டதில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

திமுகவின் முக்கியமான அறிவிப்பு ஆளும் கட்சியை மிரட்டியுள்ளது. அதுதான் 1கிலோ அரிசி 2 ரூபாய்க்கு என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பு.நாம் அறிவுத்தவுடன், அதற்கு மக்கள் வரவேற்பு கிடைத்தவுடன், வேக வேகமாக10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்கிறார்கள்.

1 கிலோ அரிசி 2 ரூபாய் என்று கலைஞர் அறிவித்தபோது அதை கடுமையாகவிமர்சித்தவர்கள், எப்படி 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்கலாம்? அதுஎன்ன நியாயம்?

எங்களால் கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு தர முடியாது என்று கூறி ஜெயலலிதாவால்மட்டும் எப்படி இலவசமாக அரிசியைக் கொடுக்க முடியும்?

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நடந்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்து மக்கள்வாக்களிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+