இந்த வேட்பாளரின் சொத்து 94 ரூவா 15 காசு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
திருச்செங்கோடு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததேன்மொழி என்ற சுயேச்சை வேட்பாளர் தனக்கு சொந்தமாக 94 ரூபாய் 15 காசுகள்மட்டுமே உள்ளதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர்திருச்செங்கோடு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.இதற்கான வேட்பு மனுவை தேன்மொழி தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரம்குறித்த பிரமாணப் பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்தார்.
அந்த பத்திரத்தில் தனக்கு அசையும், அசையாச் சொத்து என எதுவும் இல்லை. 94ரூபாயும் 15 காசுகளும் மட்டுமே தன்னிடம் உள்ள ஒரே சொத்து என்று அவர்குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் அஞ்சு காசெல்லாம் வைத்திருக்கும் தேன்மொழி பெரிய சில்லரைக்காராகஇருப்பார் போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications