கார்த்திக் எங்கே? செல்போன் சுவிட்ச் ஆஃப்
சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜன், மதுரை சாமியார், இயக்குனர் இமயம் ஆகியோர் மூலம் சொல்லியும்,உளவுத்துறையை விட்டு மிரட்டியும், அடாவடி சினிமா பைனான்சியர் ஒருவரை விட்டு அதட்டி, உருட்டியும்அதிமுகவுக்குக் கட்டுப்பட மறுத்துவிட்ட நடிகர் கார்த்திக்கை இன்று நிருபர்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் செந்தில்,அதிமுகவினரால் மிரட்டப்பட்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டியில் இருந்த கார்த்திக்கூறுகையில்,செந்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுகுறித்த முழு விவரங்களையும்கோரியுள்ளேன். மாவட்டத் தலைவர் பூண்டி சுகுமாரன் இதுதொடர்பாக முழுவிவரங்களையும் எனக்கு அனுப்பி வைப்பார்.
அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும். எங்கள் கட்சிக்குமிரட்டல்கள் தொடர்கின்றன என்றார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பொன்.முருகனுக்குகடும் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறிய கார்த்திக், பொன்.முருகனுக்குஏதாவது பிரச்சனை வந்தால் நானே களமிறங்குவேன் என்றும் கூறினார்.
இந் நிலையில் இன்றுப கார்த்திக்கை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊட்டியில் இருந்து கிளம்பியஅவர் மதுரைக்குக் கிளம்பினார். மதுரை மருத்துவமனையில் உள்ள அவரது கட்சியின் வேட்பாளரை சந்திக்கக்கூடும் பின்ன்ர் அங்கிருந்து அவர் ஆண்டிப்பட்டி செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனைக்கு பகல் வரை வரவில்லை. கார்த்திக்கின் செல்போனும் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டுள்ளது. அவரது உதவியாளர் செல்போனும் ஆப் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இயக்குனர் இமயம் மூலம் கார்த்திக்கை தாஜா செய்ய அதிமுக தரப்பில் முயற்சி நடந்ததாம். ஆனால்,போயஸ் கார்டனில் தன்னை முதல்வர் ஜெயலலிதா நடத்திய விதத்தையும் தனக்கு நேர்ந்த அவமானத்தையும்கார்த்திக் நேரில் போய் அவரிடம் விவரித்திருக்கிறார்.
அப்படியா நடத்துனாங்க.. என்று கவலையோடு கேட்டுவிட்டு அனுப்பி வைத்துவிட்டாராம் இயக்குனர் இமயம்.
அதே போல மதுரை சாமியார் ஒருவரின் ஆட்கள் கார்த்திக்கிடம் வந்து, உன் கடனை பூராவும்அடைக்கிறாங்களாம்ப்பா. கூடவே 10 வரைக்கும் அள்ளித் தரவும் தயார இருக்காக.. என்று பேரம் பேச, என்கடனை அடைக்க எனக்குத் தெரியும். நீங்கள் கிளம்புங்க என்று அனுப்பி வைத்திருக்கிறார் கார்த்திக்.
அதே நேரத்தில் உளவுத்துறை மற்றும் அடவாடி ஆசாமிகள் மூலமாக கார்த்திக்கு மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளனவாம்.












Click it and Unblock the Notifications