சென்னை போலீஸ் கமிஷ்னராக லத்திகா சரண்: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பெண் அதிகாரியான லத்திகா சரணைஉடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பின் முதல்வர் ஜெயலலிதாவை ஆகா ஓஹோ என்றுபாராட்டி சிக்கலில் மாட்டினார் நடராஜ். இதையடுத்து அவரை மாற்றி தேர்தல்ஆணையம் உத்தரவிட்டது.

அவருக்குப் பதிலாக 3 அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைக்க கோரி தமிழகஅரசுக்கு உத்தரவும் அனுப்பியது.

ஆனால், அதைை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆணையத்தின் முடிவை ஏற்க வேண்டியஅவசியம் தமிழக அரசுக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில்ஆணையத்துடன் தமிழக அரசு பேச வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஆணையத்துடன் பேசவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

மேலும் ஆணையர் நடராஜை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்குமீண்டும் உத்தரவிட்டது. புதிய ஆணையரை நியமிக்க வசதியாக 3 அதிகாரிகள்கொண்ட பெயர்களை பரிந்துரைக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.

பெயர் பட்டியலை அனுப்ப 18ம் தேதி (நேற்று) தான் கடைசி நாள். ஆனால், தமிழகஅரசு எந்த பதிலும் அளிக்காமல் மெளனம் சாதித்து வந்தது.

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் தலைமையில் டெல்லியில்தேர்தல் ஆணையர்களின் கூட்டம் நடந்தது. அதில், தமிழக அரசின் மோதல்போக்குக்கு கவலை தெரிவித்த அதிகாரிகள், பட்டியலை அனுப்ப இன்று மாலை வரைதமிழக அரசுக்கு கெடு விதித்தனர்.

ஆனால், இன்றும் பட்டியலை அரசு அனுப்பவில்லை. இதையடுத்து தேர்தல்ஆணையமே நடராஜைத் தூக்கிவிட்டு லத்திகா சரணை ஆணையராக நியமிக்கஉத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் முறைப்படியான கடிதம்அனுப்பியுள்ளது.

முன்னதாக போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறைச் செயலாளர் பவன்ரெய்னா, தேர்தல் கமிஷன் உத்தரவை மதித்து வேறு அதிகாரியை நியமித்துவிடுவோம்என்று தலைமைச் செயலாளர் நாராயணனிடம் கூறியதாகவும், இதில் முதல்வர் தான்முடிவு செய்ய வேண்டும் என்று நாராயணன் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தஅதிரடி உத்தரவை தமிழக அரசு ஏற்குமா அல்லது வழக்கம் போலகண்டுகொள்ளாமல் விட்டு சிக்கலை மேலும் பெரிதாக்குமா என்று தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் தேர்தல் ஆணையத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்குதலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் தள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+