சரத்துக்கு அதிமுக அனுப்பிய ஸ்பெஷல் பிளைட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரத்குமாரையும் ராதிகாவையும் அதிமுகவுக்குக் கொண்டு வருவதில் நடராஜன்மட்டுமின்றி அவரது தம்பி உள்ளிட்டோரும் பெரும் முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் வைத்து ராதிகா-குமாரை நடராஜன் சந்தித்து எல்லாம் பேசி முடித்த பின்தம்பதியர் சென்னைக்கு திரும்பினர்.

சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக பெங்களூர்மதுபான பார்ட்டிக்குச் சொந்தமான சார்டர்ட் விமானத்தில் தான் ராதிகாவும்சரத்குமாரும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்களாம்.

மதுரையில் சங்கம் ஓட்டலில் ராதிகாவும் சரத்குமாரும் தங்க ரூம் புக் செய்ததுநடராஜனின் தம்பி ராமச்சந்திரன் தானாம். மதுரையில் சரத்துக்கு எல்லாஏற்பாடுகளையும் கவனித்ததும் அவரே. ஹோட்டல் ரூமைப் பூட்டுவது, கார் ஏற்பாடுசெய்தது உள்பட எல்லாமே.

ஆனால், ஹோட்டலுக்கு பில்லைக் கட்டியது ஒரு கல்லூரியின் நிர்வாகி என்கிறார்கள்.

மதுரையில் சரத்-ராதிகாவுக்கு பாதுகாப்பு தந்தது பூலித்தேவன் பேரவை என்றநடராஜன் நடத்தி வரும் அமைப்பின் உறுப்பினர்கள். நடராஜன் படம் போட்ட ஐடிகார்டு, தொப்பி, யூனிபார்மில் சரத்தை நிழல் போல தொடர்ந்தது இந்தப் படை.

இவ்வாறாக நடராஜன் தரப்பில் பலரும் களம் புகுந்து தான் சரத்தையும் ராதிகாவையும்சிங்கப்பூரில் வைத்து அதிமுகவுக்குள் இழுத்து, ஸ்பெஷல் பிளைட்டில் மதுரைக்குஅனுப்பி, அங்கிருந்து தேனிக்கு அழைத்துக் கொண்டு போய் முதல்வர் ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் சேர வைத்தனர் என்கிறார்கள்.

சன் டிவியில் வருமானம் கொட்டும் ஸ்லாட்டுகள் கிடைத்தும் கூட சரத், ராதிகாவுக்குகடன் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ராதிகா தரப்பு தயாரித்த சில படங்களில் பெரும் தோல்வி தான் கடனுக்குக்காரணமாம். மேலும் சரத்துக்கு முன்பிருந்தே பணப் பிரச்சனை இருந்து வந்தது.

சரத்தை வைத்து ராதிகா நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சி மூலம் அவரது கடன்கொஞ்சம் தீர்ந்தது. அப்போது தான் இருவரும் திருமணம் செய்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+