மாறன் சகோதரர்களிடம் 10000 கோடி-சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பியும், மத்திய அமைச்சருமானதயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் ரூ. 10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்இருப்பதாகவும், மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருவரும் பல்வேறுசொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சுவாமி கூறுகையில்,

கலாநதி மாறன் மற்றும் தயாநதி மாறன் ஆகிய இருவரும், வருமானத்திற்கு மீறியவகையில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக தமிழகம்,இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் ரூ. 10,000 கோடி அளவுக்குசொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் பணமாக இல்லை. வீடுகள், ரியல் எஸ்டேட், ஷேர்கள்என மட்டும் ரூ. 10,000 கோடிக்கு இரு சகோதரர்களும் சொத்து சேர்த்துவைத்துள்ளனர்.

இது ஒரு குற்றச் செயல். இரு சகோதரர்களும் நியாயமான, நேர்மையான முறையில்தொழில் செய்து இவற்றை சம்பாதிக்கவில்லை. இருவரிடமும் விசேஷமான படிப்பும்இல்லை.

சன் டிவியின் விளம்பர வருவாய், கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டியும்,அச்சுறுத்தியும் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் இந்த அளவுக்கு சொத்துக்களைவாங்கிக் குவித்துள்ளனர்.

இவ்வளவு அதிக அளவில் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதால் இதுகுறித்துகணக்கெடுப்பு நடத்தி விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி மத்திய அரசின்வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 3மாதங்களுக்கு முன்பு கோப்பு ஒன்றை அனுப்பினர்.

ஆனால் அதற்கு அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் சிதம்பரம்.

எனக்கு இந்தத் தகவல் 2 நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. தமிழகம் தவிரஇந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்தச் சொத்துக்கள் உள்ளன. இதுதவிர,மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர்கள்இறங்கியுள்ளனர்.

அங்கு பல வீடுகளையும் வாங்கி வைத்துள்ளனர். இவர்களின் சொத்துக் குவிப்புதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் தக்கஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+