ஜெயாவி" கையில் அட்சய பாத்திரம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

அதிமுக கூட்டணிக்கு அபரிமிதமான வெற்றியைக் கொடுத்து, மாநில மக்களைவஞ்சித்து வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்றுவேலூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் வைகோ.

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தந்து வரும்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பேசுகையில்,

திமுக கூட்டணி கட்சிகளுக்கு நடந்த தொகுதிப் பங்கீட்டைப் பார்க்கும்போதுகூட்டணி ஆட்சி அமைத்தாவது மீண்டும் ஆட்சிப் பீடத்தில் ஏறி விட வேண்டும் எனகருணாநிதி நினைப்பது தெளிவாகிறது.

கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி ஆசைப்படலாம். ஆனால் மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். அதிமுகவுக்குத்தான் தனிப் பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆதரவைஅவர்கள் அளிக்கப் போகிறார்கள்.

அதிமக ஆட்சியில் தமிழகம் சொர்க்க பூமியாக திழ்கிறது. ஜாதிக் கலவரம், மதக்கலவரம் என எதுவுமே கிடையாது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 10 கிலோஅரிசி என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதைப் பார்த்து திமுக உள்ளிட்டகட்சிகள் ஆடிப் போயுள்ளன.

முதல்வர் கையில் அட்சயப் பாத்திரம் உள்ளது. தேவைப்படுவோருக்கு அத்தனையும்அதிலிருந்து கிடைக்கும்.

சுனாமி, கன மழை வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களால் தமிழக மக்கள்பாதிக்கப்பட்டபோது, திமுகவின் தடையால் தமிழக மக்களுக்கு உதவி செய்ய தமிழகஅரசுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. (அந்தக் கூட்டணிக்கு தரும்ஆதரவை உடனே வாபஸ் பெற வேண்டியது தானே, மிஸ்டர் வைகோ)

வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அபரிமிதமான வாக்குகளை அளித்து பெருமவெற்றியைக் கொடுத்து மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வண்டும்என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+