கோவை: விஜய் ரசிகர் மன்ற தலைவர் போட்டி
கோவை:
நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகராவின் ஆசியுடன், கோவை மாவட்டவிஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் கோவை மேற்கு தொகுதியில்போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
எனது ஆதரவு யாருக்கும் கிடையாது, உங்கள் இஷ்டப்படி யாருக்கும் வாக்களிக்கலாம்என ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு செய்தி கொடுத்தார். ஆனால் அதை ரசிகர்கள்ஏற்கவில்லை.சில மன்றங்கள் அதிமுகவுக்கு ஆதரவாகவும், சில மன்றங்கள் திமுகவுக்குஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ரஜினி ரசிகர் மன்ற கொடிகளும் இந்தஅரசியல் கட்சி பிரசாரக் கூட்டங்களில் காணப்படுகின்றன. இதற்கு ரஜினி கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதேபோல விஜய் ரசிகர் மன்றம் சர்ச்சையில் சிக்கியது. ஆண்டிப்பட்டி தொகுதியில்முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விஜய் ரசிகர் மன்றத் தலைவர் போட்டியிடப்போவதாக வந்த செய்தியை நடிகர் விஜய் மறுத்தார்.
போட்டியிடப் போவதாக கூறுபவர் ரசிகர் மன்றத் தலைவரே கிடையாது, அவரைரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் கோவை விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் ,கோவை மேற்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார்.
இவர் வடவள்ளி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்தவர். தேர்தலில்போட்டியிடுவதற்காக தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு களத்தில்குதித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு சென்னை சென்ற யுவராஜ் அங்கு விஜய்யின்தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகராவை சந்தித்து தனது முடிவைத் தெரிவித்தார்.
அதைக் கேட்டு பாராட்டிய சந்திரசேகர், தாராளமாகத் தேர்தலில் போட்டியிடுங்கள்.ஆனால் விஜய் ரசிகர் மன்ற பெயரையோ, பேனரையோ, விஜய்யின் படத்தையோபயன்படுத்தக் கூடாது என்று கண்டிஷனுடன் கூடிய வாழ்த்துக்களைத் தெரிவித்தாராம்.
விஜய்யும் தொலைபேசி மூலம் யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்தாராம்.
கடந்த 13 வருடமாக விஜய் ரசிகர் மன்றத்தில் செயல்பட்டு வரும் யுவராஜ்,கோவையை தமிழகத்தின் 2வது தலைநகராக்குவதே எனது லட்சியமாம்.
அவர் கூறுகையில், பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளேன்.தொகுதியில் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது. நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்என்றார்.












Click it and Unblock the Notifications