கேப்டனை கடுப்படித்த பொது ஜனம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

15 கிலோ ரேஷன் அரிசியை இலவசமாக வழங்குவேன் என்று நடிகர் விஜயகாந்த்பேசிக் கொண்டிருந்தபோது, அதெல்லாம் சும்மா என்று ஒருவர் குரல் கொடுத்ததால்கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சிவதாபுரத்தில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த்பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்றுபட்டியலிட்டார்.

மாதந்தோறும் 15 கிலோ இலவச ரேஷன் அரிசி உங்கள் வீடு தேடி வரும் என்றுவிஜயகாந்த் கூறியபோது, அதெல்லாம் சும்மா, நடக்கிற காரியமா அது என்று ஒருகுரல் சப்தமாக ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த் தனது பேச்சை நிறுத்தினார். யார் இவ்வாறுபேசியது என்று கேட்டார்.

ஆனால் கூட்டத்திலிருந்து ஒரு பதிலும் வரவில்லை (தைரியமாக சொன்னால்தொண்டர்களிடம் சிக்கி சீரழிய வேண்டி வரும் என்பது அந்த அன்பருக்கு தெரியாதா,என்ன!) திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்த விஜயகாந்த் தனது பேச்சைத்தொடர்ந்தார்.

நான் சொல்வதை கேலி செய்யும் நீங்கள் நிச்சயம் வேறு கட்சியைச் சேர்ந்தவராகத்தான்இருப்பீர்கள். தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.

என்னால் முடியும், செய்ய முடியும். நம்புங்கள். எனது கையிலிருந்து நான் கொடுக்கப்போவதில்லை. மக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதான் இதை செய்யப் போகிறேன்.

நாங்கள் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருவோம் என்று அறிவித்ததால் தான்ஜெயலலிதாவும் 10 கிலோ அரிசி தருவதாக அறித்தார் என்றார்.

முன்னதாக கரூரில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த், ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடுமுழுவதும் 29,000 கி.மீ. சுற்றி மக்களை சந்தித்துவிட்டேன். இதுவரை மாறி மாறிகொள்ளையடித்த திமுகவும் அதிமுகவும் இப்போது மூன்றாவதாக எங்கள் கட்சிவளர்கிறது என்றவுடன் ஆளுக்கு ஆள் போட்டி போட்டு சலுகைகளைஅறிவிக்கிறார்கள்.

நாங்கள் சின்னமே இல்லாமல் போட்டியிடுவதாக கேலி பேசுகிறார்கள். சின்னம்குறித்து 24ம் தேதி மாலை தெரிய வரும். அரசியலுக்காக சினிமாவை சிறிது காலம்குத்தகைக்கு விட்டுள்ளேன் என்றார்.

பின்னர் நாமக்கல்லில் பேசுகையில், இப்போது எங்கள் கட்சி வேட்பாளர்களையும்ஒன்றிய செயலாளர்களையும் டெலிபோனில் விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.மாவட்டத் தலைவர்களுக்கு ரூ. 25 லட்சம் தருவதாக சொல்கிறார்களாம். ரூ. 1 கோடிகொடுத்தாலும் என் கட்சியின் விலை போக மாட்டார்கள்.

எங்களுக்கு 22 இடங்களில் வெற்றி கிடைக்கும் என மத்திய உளவுத்துறை சர்வேயில்தெரிய வந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பாஸ் மாதிரி இலவசரயில் பாசும் தருவோம் என்றார்.

எழும்பூர் வேட்பாளர் மாற்றம்:

இதற்கிடையே எழும்பூர் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ரவிச்சந்திரனை விஜய்காந்த் மாற்றியுள்ளார். அவருக்குகட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் அவரை மாற்றிவிட்டு எத்திராஜை வேட்பாராக்கியுள்ளார் விஜய்காந்த்.

விஜயகாந்த் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+