கலர் டிவி: திமுக மீது குப்தாவிடம் அதிமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலவச கலர் டிவி தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது தேர்தல்நடத்தை விதி மீறல். எனவே திமுக தலைவர் கருணாநிதி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் செய்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஆறுமுகம், திவாகர்ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு அனுப்பியுள்ளபுகாரில்,

கலர் டிவி திட்டத்தை திமுக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி யார் யார் வீட்டில்கலர் டிவி இல்லை என்று கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டதாக கருணாநிதிதனது பிரசாரத்தின்போது தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான தேர்தல் நடத்தைவிதிமீறல் ஆகும்.

வாக்காளர்களை திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க அவர் தூண்டுகிறார்.வாக்களிப்பதற்காக ஒரு பொருளை இலவசமாக தருவதாக ஆசை காட்டுவது நடத்தைவிதி மீறலாகும்.

எனவே தேர்தலில் போட்டியிடும் தகுதியை கருணாநிதி இழந்து விட்டதாக அறிவிக்கவேண்டும். கலர் டிவி தொடர்பான கணக்கெடுப்பை திமுக நடத்த தடை விதிக்கவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+