அ.விஜயகாந்த்-க.விஜயகாந்த்-ச.விஜயகாந்த்: பாமக வைத்த பாம்: அதிர்ச்சியில் தேமுதிக!
விருத்தாச்சலம்:
நடிகர் விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் என்றபெயரில் மேலும் 3 பேர் போட்டியிடுவதால் தேமுதிகவினர் கலங்கிப் போயுள்ளனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில்போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரதுமனைவி பிரேமலதா மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.இந் நிலையில் விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 பேர் மனு தாக்கல்செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று இந்த மூன்று பேரும்அடுத்தடுத்து வந்து மனு தாக்கல் செய்தனர்.
ஓட்டு போடும் வரும் வாக்காளர்களைக் குழப்ப இந்த மூன்று விஜய்காந்த்களையும்பாமக தான் மறைமுகமாக நிறுத்தியுள்ளதாக விஜய்காந்த் தரப்பு கருதுகிறது.
மனுதாக்கல் செய்த 3 பேரில் ஒருவர் அ.விஜயகாந்த். இவர் கடலூர் மாவட்டம்சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவர் க. விஜயகாந்த். இவர் சிதம்பரம்வையலூர் காலனியைச் சேர்ந்தவர். 3வது விஜயகாந்த் ச.விஜயகாந்த். இவர்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
நடிகர் விஜயகாந்த்தின் இனிஷியலும் அ என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் உள்பட நான்கு விஜயகாந்த்துகளுக்கும் சுயேச்சை சின்னமேஒதுக்கப்படவுள்ளது.
இதனால் ஒரே தொகுதியில் நான்கு விஜயகாந்த்துகள் போட்டியிடுவதால்வாக்காளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும் எனத் தெரிகிறது.
இந்தக் குழப்பத்தில் விஜய்காந்த்துக்கு வரும் வாக்குகள் சிதறும் என கணக்குப்போட்டு இவர்களை களமிறக்கியதே பாமகவினர் என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்தேமுதிகவினர்.
இவர்கள் தவிர, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தைஎதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த துணை நடிகை தேவியும்விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கேப்டன் சென்னை வலம்:
இதற்கிடையே விஜயகாந்த் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை நகரத்தொகுதிகளை வலம் வந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தின் முக்கால்வாசிப் பகுதியை சுற்றி வந்து விட்ட தேசிய முற்போக்குதிராவிட கழகத் தலைவரான விஜயகாந்த் வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்குசென்னை நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
வெள்ளிக்கிழமை, பெரம்பூர் 100 அடி சாலையிலிருந்து அவர் தனது பிரசாரத்தைத்தொடங்குகிறார். அங்கிருந்து செம்பியம், பெரம்பூர் பஸ் நிலையம், மாதவரம்நெடுஞ்சாலை, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம்செய்கிறார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குசேகரிக்கிறார். வடசென்னை தொகுதிகளை முடித்து விட்டு மத்திய சென்னைதொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் தென் சென்னை தொகுதிகளிலும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுதே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.












Click it and Unblock the Notifications