தயாநிதியை தடுத்து மண்டை காய்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

முதல்வர் ஜெயலலிதா வரும் பாதையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அங்கு கூடியிருந்தவர்களிடம் திமுகவேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான பகுதிகளில் பிரசாரம்மேற்கொண்டார். இதேபோல மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் அப்பகுதியில்பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

தனது பிரசாரத்தை முடித்து விட்டு உடுமலையிலிருந்து பல்லடம் நிாேக்கிக்கிளம்பினார் தயாநிதி மாறன். பொள்ளாச்சியில், பொள்ளாச்சி-உடுமலை சாலையில்அவர் செல்ல முயன்றபோது அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

மதல்வர் இந்த சாலையில் வந்து கொண்டிருக்கிறார். எனவே உங்களால் இந்தப்பாதையில் செல்ல முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த தயாநிதி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.பின்னர் கோவை ஊரக மாவட்ட எஸ்.பி. தேன்மொழி அங்கு வந்து, முதல்வர் வந்துகொண்டிருக்கிறார், மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் இப்பாதையில்செல்ல முடியாது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் வேறு பாதையில் செல்ல முடிவு செய்தார்தயாநிதி.

ஆனாலும், உடனடியாகச் செல்லாமல் அங்கு கூடியிருந்த அதிமுகவினர் மத்தியில்சிறிது நேரம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் தயாநிதி மாறன்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் டென்சனாக, போலீசார்தயாநிதியை தடுக்க முயன்றனர்.

ஆனால், முதல்வர் வர்றதால நீங்க தானே தடுத்தீங்க.. இல்லாட்டி நான் பேசாமாபோயிருப்பேன். நீங்க தானே நிப்பாட்டினீங்க. நான் நிற்கிறேன். நின்ற இடத்தில்பிரச்சாரம் செய்றேன்.

நான் இங்கே பிரச்சாரம் செய்வதை நீங்கள் எப்படி தடுக்கலாம்? என்ன ரூல் படிஎன்னைத் தடுக்கிறீர்கள் என்று கேட்டார்.

போலீசார் பதில் சொல்ல முடியாமஸ் டென்சனில் கையைப் பிசைந்தனர். அதிமுககூட்டத்தில் தயாநிதி பிரச்சாரம் செய்வது முதல்வருக்குத் தெரிந்தால் அம்போஎன்பதால் பயத்தில் மிரண்டு போய் நின்றிருந்தனர்.

அதே நேரத்தில் அதிமுகவினர் கோபமாகி கூச்சலிட, தயாநிதியைச் சுற்றி திமுகவினர்நூற்றுக்கணக்கில் திரண்டு அரண் போல நின்றனர்.

இதையடுத்து அதிமுகவினர் மத்தியில் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரத்தை ஆற,அமர செய்துவிட்டே அங்கிருந்து கிளம்பி தயாநிதி வேறு பாதையில் பல்லடம்கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+