தமிழன் மானத்தைக் காப்பது திமுக: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழனின் தன்மானத்தைக் காப்பது திமுக மட்டுமே. மக்கள் பிரச்சினைகளுக்குப்போராட்டம் நடத்தி தீர்வு காண்பதும் நாங்கள்தான் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ள கருணாநிதி, சங்கர் நகர்,சிந்துபூந்துறை, நெல்லை சந்திப்பு, டவுன், சீதபற்பநல்லூர், ஆலங்குளம் ஆகியஇடங்களில் பிரசாரம் செய்தார்.

ஆலங்குளத்தில் அவர் ஆலடி அருணாவின் மகளான திமுக வேட்பாளர்பூங்கோதையை ஆதரித்துப் பேசினார். அப்போது,

ஆலடி அருணாவின் பணிகளை மனதில் கொண்டு அவரது மகளுக்கு வெற்றி தேடித்தர வேண்டும். அவரது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அனைவரும்பூங்கோதையை போட்டியின்றித் தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்ய அதிமுக முன் வராது என்றார் கருணாநிதி.பின்னர் தென்காசி வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனை ஆதரித்து பாவூர்சத்திரத்தில்கருணாநிதி பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் சாதாரண மக்களுக்கும் பயன்அளிக்கும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் உள்ள அத்தனையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நறைவேற்றப்படும்.தமிழன் தன்மானம் மிக்கவன், அவன் யாருக்கும் அடிமை இல்லை. தமிழனின்தன்மானத்தைக் காப்பது திமுக மட்டும்தான். மக்கள் பிரச்சினைகளுக்காகபோராடுவதும் திமுக மட்டுமே என்றார் கருணாநிதி.வெற்றி பெற வையுங்கள்: ஸ்டாலின்

இதற்கிடையே ஆயிரம் விளக்கு தொகுதியில் என்னை மீண்டும் வெற்றி பெறவையுங்கள் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். 6வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின் இங்கு நான்கு முறைவெற்றி பெற்றுள்ளார்.

நேற்று மாலை தனது தொகுதியில் வீதி வீதியாக சென்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.திறந்த ஜீப்பில் சென்ற ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பாபு தெருவில் மெழுகுவர்த்தி ஏந்திய பெண்கள் ஸ்டாலினை வரவேற்றனர்.

பின்னர் அங்கு ஸ்டாலின் பேசுகையில், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. பலமுறைஇங்கு என்னை வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறையும் என்னை வெற்றி பெறவையுங்கள்.

உங்களுக்குப் பணியாற்ற மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்று அன்புடனும்,பாசத்துடனும் கேட்டுக் கொள்கிறேன். கருணாநிதி தலைமையில் மீண்டும் சிறப்பானஆட்சி மலர எனக்கு வாக்களியுங்கள் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+