கேரளத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கிறது. 11 மணி வரை 20 சதவீதவாக்குகளே பதிவாயின.இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 29ம் தேதி நடக்கிறது. 3வது கட்ட வாக்குப் பதிவு மே மாதம் 3ம் தேதி நடக்கிறது.
அதே போல மேற்கு வங்க மாநிலத்தில் 66 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.பகல் 12 மணி வரை 30 சதவீத வாக்குகள் பதிவாகின.
முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 17ம் தேதி நடந்தது. அதில் 81 சதவீத வாக்குகள் பதிவாயின. அம் மாநிலத்தில்மொத்தம் 5 கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.












Click it and Unblock the Notifications