விஜயகாந்த் எல்லாம் ஒரு ஆளா? நெப்போலியன்
திண்டுக்கல்:
திண்டுக்கலில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் குறித்து கேள்விஎழுப்பிய பெண்ணைப் பார்த்து, விஜயகாந்த் எல்லாம் ஒரு ஆளா என்று நடிகர்நெப்போலியன் கோபமாக கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடிகர் நெப்போலியன்திமுகவுக்காக பிரசாரம் மேற்கொண்டார். மேட்டுப்பட்டி என்ற இடத்தில் அவர்பேசினார்.அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருவேன் என்றுகூறுகிறீர்களே, கண்டிப்பாக கொடுப்பீங்களா என்று கேட்டார்.
அவரது கேள்வியை லாவகமாக எதிர்கொண்ட நெப்போலியன், நிச்சயமாககொடுப்போம். இல்லையென்றால் எனது சென்னை முகவரியைத் தருகிறேன். அங்குவாருங்கள், நான் கொடுக்கிறேன் என்றார்.
பின்னர் இன்னொரு பெண், விஜயகாந்த் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுப்பதாககூறுகிறாரே என்று கேட்டார்.
இதனால் கடுப்பாகிப் போன நெப்போலியன், விஜயகாந்த்தெல்லாம் ஒரு ஆளா,அவரெல்லாம் நடிக்கத்தான் லாயக்கு, அரசியலுக்கு லாயக்கில்லை என்று கோபமாகசொன்னார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நெப்போலியன்அங்கிருந்து மெதுவாக நகர்ந்து ஆத்தூர் பக்கம் போய் விட்டார்.












Click it and Unblock the Notifications