பிரமோத் மகாஜன் மீது சகோதரர் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பாஜக பொதுச் செயலாளரான பிரமோத் மகாஜனை அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் துப்பாக்கியால் சுட்டார்.இதில் உடலில் 3 குண்டுகள் காய்ந்து பலத்த காயமடைந்த பிரமோத் மும்பை இந்துஜா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை வோர்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.உடலில் இருந்து குண்டுகளை அகற்ற மகாஜனுக்கு அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.
குடும்பப் பிரச்சனை காரணமாக அவரை பிரவீன் மகாஜன் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இதையடுத்துஅவரே மும்பை போலீஸ் கமிஷ்னரிடம் துப்பாக்கியுடன் சரணடைந்துவிட்டார்.
மகாஜன் சுடப்பட்ட செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்துஜா மருத்துவமனையில்குவிந்தனர்.
அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் ரத யாத்திரையை நிறுத்திவிட்டு மும்பை விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications