போட்டியிலிருந்து விலக முத்துலட்சுமி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலக மாட்டேன் என்றுவீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

பாமகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முத்துலட்சுமி ஆரம்பத்தில் ஆர்வம்காட்டினார், இதற்காக முயற்சிகளும் எடுததார். ஆனால் பாமக முத்துலட்சுமியைக்கண்டுகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து பெண்ணாகரம் தொகுதியில் முத்துலட்சுமி சுயேச்சையாக களம்கண்டுள்ளார். இதனால் பாமக மற்றும் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பெண்ணாகரம் தொகுதி கிடைக்காத கோபத்தில் இருந்த பாமகவின் ஒரு தரப்பினரும்முத்துலட்சுமிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் இத்தொகுதியில் திமுக வெற்றிகடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய பாமக நிறுவனர்ராமதாஸ், முத்துலட்சுமி போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை முத்துலட்சமி நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அதிரடிப்படையின் நடவடிக்கைகளால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள், பெண்களின் முன்னேற்றத்துக்காகநான் குரல் கொடுத்து வருகிறேன்.

பெண்ணாகரம் தொகுதி மக்கள் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர். நான்அரசியலில் ஈடுபடுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டபெண்களின் பிரதிநிதியாக களத்தில் நிற்கிறேன்.

பெண்ணாகரம் தொகுதி மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள். அவர்கள்தான்என்னை தேர்தலில் நிற்க சொன்னார்கள். எனக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது.

இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் என்னை போட்டியிலிருந்து விலகுமாறு கூறியுள்ளார்.இது சங்கடத்தைக் கொடுக்கிறது. இருந்தாலும் நான் போட்டியிலிருந்து விலகமாட்டேன். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்முத்துலட்சுமி.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

முத்துலட்சுமியை அவரை சிலர் தூண்டி விட்டு தேர்தலில் இறக்கி விட்டுள்ளனர். அவர்விலக வேண்டும் என்றார்.

அவரிடம் நடிகர் சரத்குமார் குறித்து கேட்டதற்கு, அது குறித்து நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+