தேர்தல் எதிர்ப்பு பிரசாரம்: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தேர்தல் எதிர்ப்பு பிரசாரப் புத்தகத்தை விற்றதாக மக்கள் கலை இலக்கியக் கழகம்அமைப்பைச் சேர்ந்த தொண்டரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் தொட்டப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராவணன்.மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற கம்யூனிஸ அமைப்பைச் சேர்ந்தவர் ராவணன்.சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி காட்பாடி புதிய மேம்பாலம் அருகேஉள்ள பஸ் நிலையப் பகுதியில் இவர் பிரசாரப் புத்தகத்தை வினியோகித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸுக்குப் புகார் போனது. இதைத் தொடர்ந்து ராவணனை போலீஸார்கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications