காவிரி நடுவர் மன்றத்தின் புதிய முடிவு: தமிழகம் அதிர்ச்சி
சென்னை:
காவிரிப் பாசனப் பகுதியில் ஆண்டுக்கு எத்தனை முறை பயிர் சாகுபடிநடைபெறுகிறது என்பது குறித்தும், அதற்குத் தேவையான தண்ணீரின் அளவுகுறித்தும் கணக்கெடுப்பு நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்தியஅரசுக்குகாவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர்மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்று அவைகோரியுள்ளன.தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில்ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு வி.பி.சிங்பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவர் மன்றத்தின் தலைவராக தற்போது என்.பி.சிங் இருக்கிறார்.உறுப்பினர்களாக சுதீர் நாராயணன், என்.எஸ்.ராவ் ஆகியோர் உள்ளனர்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், கர்நாடக அரசுதமிழகத்திற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றுஇடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
நடுவர் மன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் சட்டையே செய்யவில்லை.அது பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.
இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் நடுவர் மன்றத்தின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமையுடன்முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடுவர் மன்ற உறுப்பினர்களான ராவும், சுதீர் நாராயணனும் புதியகுழப்பத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டார்கள்.
விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என்ற அறிவிப்புவெளியாகவிருந்த நிலையில் சுதீர் நாராயணன் மற்றும் ராவ் ஆகிய இருவரும்,புதிதாக 3 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இந்தக் குழு, காவிரிப் பாசன மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும்கேரளாவில் ஆண்டுக்கு எத்தனை முறை பயிர் சாகுபடி நடைபெறுகிறது, சாகுபடிக்குத்தேவையான ஆண்டு நீர் விவரம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
அவர்களது முடிவுக்கு நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் கடும் எதிர்ப்புதெரிவித்தார். அவர் கூறுகையில், நடுவர் மன்றம் தொடங்கி ஏற்கனவே 16 ஆண்டுகள்ஆகி விட்டன. இந் நிலையில் புதிதாக ஒரு குழுவை அமைத்தால் வழக்க முடியமேலும் 10 ஆண்டுகள் கால தாமதம் ஏற்படும். எனவே நிடுவர் மன்றமே தீர்ப்பைவழங்க வேண்டும் என்றார்.
ஆனால் அவரது கூற்றை மற்ற இரு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து 2க்கு 1 என்ற பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில், புதியகுழு வை அமைக்க மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டது. நடுவர்மன்றத்தின் இந்த உத்தரவு தமிழக காவிரிப் பாசன விவசாயிகளிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக ஒரு குழு அமைத்து, அது எப்போது ஆய்வைத் தொடங்கி, எப்போது முடித்து,எப்போது தீர்ப்பு வரும் என்பது தெளிவில்லை. எனவே இந்த புதிய குழு என்ற முடிவுகர்நாடகத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ள முடிவாக தமிழக விவசாயிகள்கருதுகிறார்கள்.
பாஜக கருத்து:
இந் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பைதெரிவித்துள்ளன. தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறுகையில்,
நடுவர் மன்றத்தின் தீர்ப்பை தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. ஆனால்அந்தக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியைத்தருகிறது.
புதிய குழுவை அமைத்து ஆய்வில் இறங்கினால் அது முடிய 20 ஆண்டுகளுக்கு மேல்ஆகும். எனவே உடனடியாக பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். நடுவர்மன்றம் இடைக்கால உத்தரவாக பிறப்பித்துள்ள ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர்என்ற உத்தரவை, இறுதித் தீர்ப்பாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்ராஜா.
தா.பாண்டியன்:இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், இப்படி ஒரு உத்தரவைநாங்கள் எதிர்பார்க்கவில்லை. 16 ஆண்டுகள் விசாரணை நடத்தி விட்டு, பொறுப்பேஇல்லாமல் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறுவதை ஏற்கமுடியாது.
ஏற்கனவே நடுவர் மன்றத்திடம் 50,000 ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் இறுதி வாதத்தை கேட்க மறுத்து, புதிய உத்தரவை நடுவர்மன்ற உறுப்பினர்கள் பிறப்பித்திருப்பது வேதனையாக இருக்கிறது.
நடுவர் மன்ற தலைவர் என்.பி.சிங் கூறிய ஆலோசனையைக் கேட்கக் கூட மற்ற இருஉறுப்பினர்களும் மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதை ஏற்க முடியாது. பிரதமர்உடனடியாக தலையிட்டு இந்த இரண்டு உறுப்பினர்களையும் நடுவர் மன்றத்திலிருந்துநீக்க வேண்டும். இதற்கு மேலும் தமிழக மக்கள் பொறுமை காக்க முடியாது என்றார்பாண்டியன்.
ராதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், தீர்ப்பு 3 மாதத்திற்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும்வகையில் புதிய உத்தரவு ஒன்றை நடுவர் மன்றம் பிறப்பித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால்தான் நிவாரணம்கிடைக்கும். மெத்தனப்போக்கைக் கைவிட்டு உடனடியாக தமிழக அரசு இந்தவிஷயத்தில் செயல்பட வேண்டும் என்றார்.
திமுக கூட்டணி ஆலோசனை:
இதற்கிடையே காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு குறித்துவிவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின்கூட்டம் வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இக்கூட்டத்திற்கு கருணாநிதி தலைமைதாங்குகிறார். கூட்டத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்பங்கேற்குமாறு கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications