என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே..

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளசெல்வராஜின் கதை ரொம்ப சோகமானது.

தொட்டியம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்தான் இந்தசெல்வராஜ். உற்சாகமாகிப் போன செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் போய்வேட்பு மனுவையும் தாக்கல் செய்து விட்டார்.

ஆனால் வந்த பிறகுதான் அவரை மாற்றி விட்டு மாவட்ட செயலாளர் ராஜசேகரைவேட்பாளராக கட்சித் தலைமை உத்தரவிட்டிருப்பது தெரிய வந்தது.

பதறிப் போன செல்வராஜ்,தேர்தல் அதிகாரியை சந்தித்து தான்தான் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர் என்று கூறினார்.

ஆனால் அதுதொடர்பாக கட்சியிலிருந்து கொடுக்கப்படும் அங்கீகார கடிதத்தைசெல்வராஜ் கொடுக்காததால், அவரை சுயேச்சை வேட்பாளராகத்தான் கருத முடியும்என்று தேர்தல் அதிகாரி கூறி விட்டார்.

இதனால் செல்வராஜ் நொம்பலத்தில் உள்ளார். கட்சியில் சிலர் செய்த சதியால்,குழப்பத்தால் என்னை மாற்றி விட்டார்கள். நான் மாற்றப்பட்ட விஷயம் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கே தெரியாது (உங்களுக்கே தெரியலையே).

மாணவப் பருவம் முதலே நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். எனக்கே இந்தநிலை ஏற்பட்டு விட்டது.மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என்றநம்பிக்கையில் உள்ளேன் என்று சோகமாக கூறி வருகிறார் செல்வராஜ்.

முக்தா மனு தள்ளுபடி:

இதற்கிடையே தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தபிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பிராமண சங்க முக்கிய பிரமுகரும், காங்கிரஸ்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகியவருமான முக்தா சீனிவாசன், முன்னாள் கவர்ச்சிநடிகை மாயா ஆகியோரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆள் இல்லாமல் திணறிய மாயா:

முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மாயா, மனுவை முன்மொழிவதற்கு போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால் திணறினார். பின்னர் சிறிதுநேரம் கழித்து போதிய ஆட்களுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா. இவர் இப்போது அக்கட்சியில் இல்லை. சீட் கேட்டுப் பார்த்தவர் கிடைக்காதகோபத்தில் தியாகராய நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து தி.நகர் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவைக் கொடுத்தார். அதைவாங்கிய தேர்தல் அதிகாரி, முன்மொழிபவர்கள் எங்கே என்று கேட்டார்.

அதற்கு மாயா, அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். டிராபிக்கில் சிக்கிக் கொண்டனர் என்றார்.

அதைக் கேட்ட தேர்தல் அதிகாரி, அப்படியானால் அவர்கள் வந்தவுடன் திரும்பி வாருங்கள் என்று கூறி மனுவைத் திருப்பிக் கொடுத்தார். இதனால்தடுமாறிப் போன மாயா பின்னர் வெளியே சென்று காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து வாட்ட சாட்டமான 10 வாலிபர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்களுடன் மாயா மீண்டும் உள்ளே சென்று மனுவைத் தாக்கல்செய்தார்.

மாயாவுக்கு தமிழ் படிக்கத் தெரியாத காரணத்தால், சத்தியப் பிரமாணத்தை தேர்தல் அதிகாரி சொல்ல, அதை மாயா திருப்பிச் சொல்லி சத்தியப் பிரமாணம்எடுத்துக் கொண்டார். மாயாவோடு அவரது குழந்தை குணப்பிரியாவும் உடன் வந்திருந்தார்.

இவ்வளவு செய்து கடைசியில் மனு தள்ளுபடியாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+