ஊட்டி கட்டமைப்பை மேம்படுத்துவேன்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

குன்னூர்:

மலைகளின் அரசியான ஊட்டியை மேம்படுத்தி, அதன் கட்டமைப்பு வசதிகளைமேலும் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா,கூடலூர், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து பேசினார்.

பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகையில், நீலகிரி மாவட்ட மக்களின்வாழ்வாதரமாக இருக்கும் தேயிலை தொழில் கடந்த 2000மாவது ஆண்டு முதல்சிக்கலை சந்தித்து வருகிறது.

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரி விவசாயிகளின் பிரச்சினைகள்படிப்படியாக சரி செய்யப்பட்டன.

நீலகிரி தேயிலைக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் ஊட்டி டீ என்ற பெயரில்பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் டீ விற்பனை செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதவிர குன்னூரில் மின் ஏல மையம் ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரியில் நடைபெறும் அனைத்து விற்பனைகளுக்கும் தமிழ்நாடு விற்பனைவரியிலிருந்து 50 சதவீதமும், மத்திய விற்பனை வரியில் 50 சதவீதமும் தள்ளுபடிசெய்துள்ளது உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

இதுதவிர சிறு விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் கிலோ ஒன்றுக்கு 2ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மீண்டும் இந்த அரசு அமைந்தால் தேயிலைக்கான விற்பனை வரி மேலும்குறைக்கப்படும். பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில்,நிலையான ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

கூடலூர் வருவாய் கோட்டத்தில் ஜென்ம பூமி நிலத்தில் விவசாயம் செய்து வரும்25,000 விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள்மேற்கொள்ளப்படும்.

மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலாத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில்எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஊட்டியில் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்காக தனித் திட்டம்உருவாக்கப்படும்.

குன்னூரில் நிலவி வரும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். தினசரி குடிநீர் கிடைக்க வழி செய்யப்படும். குன்னூரில் சுற்றுலாதளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+