ஆண்டிப்பட்டி பா.பி வேட்பாளரை வளைத்தது அதிமுக: போட்டியிலிருந்து திடீர் வாபஸ்!
தேனி:
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பொன்.முருகனை அவரைஅதிமுக பேசி வளைத்துவிட்டது.
இதையடுத்து திடீரென போட்டியிலிருந்து அவர் வாபஸ் பெற்றுள்ளார். மேலும் அவர்அதிமுகவில் சேரவும் முடிவு செய்துள்ளார். இதனால் கார்த்திக் பெரும்அதிர்ச்சியடைந்துள்ளார்.தமிழகம் முழுவதும் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அதிமுகதரப்பிலிருந்து கடும் மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சில வேட்பாளர்களை அதிமுகவினரும் உளவுத்துறையினரும் கடத்தியும் சென்றனர்.
அவ்வாறு மிரட்டப்பட்ட திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் விஷம் குடித்தும்,தூக்குப் போட்டும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதிமுக மிரட்டல் காரணமாகவே நடிகர் கார்த்திக் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடாமல்சென்னையிலும், ஊட்டியிலும் மாறி மாறி ஓய்வெடுத்து வருகிறார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் முடிவையும் வாபஸ் பெறும் அளவுக்கு அவருக்குமிரட்டல்கள் வந்தன.
இந் நிலையில், இன்னொரு திருப்பமாக ஆண்டிப்பட்டி தொகுதியில் பார்வர்ட் பிளாக்சார்பில் நிறுத்தப்பட்ட பொன் முருகன் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட பலர் தங்களது வேட்பு மனுக்களைநேற்று வாபஸ் பெற்றனர்.
பார்வர்ட பிளாக் வேட்பாளர் பொன்.முருகன், தேசிய முற்போக்கு திராவிட கழகமாற்று வேட்பாளர் அன்வர்ராஜா,
திண்டிவனம் ராமமூர்த்தி கட்சியின் வேட்பாளர் சிவக்குமார் ஆகியோர் இதில்முக்கியமானவர்கள். தற்போது ஆண்டிப்பட்டி தேர்தல் களத்தில் அதிமுக சார்பில்ஜெயலலிதா, திமுக சார்பில் சீமான் உள்பட 16 பேர் போட்டியில் இருக்கிறார்கள்.
பொன்.முருகன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றது பார்வர்ட் பிளாக்கட்சியினரிடயைே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பு மனுவை வாபஸ் பெற்ற கையோடு, பெரியகுளத்தில் உள்ள சசிகலாவின்அக்கா மகன் தினகரன் வீட்டுக்கு பொன். முருகன் வந்தார். அங்கு தினகரனை சந்தித்துதான் அதிமுகவில் சேர விரும்புவதாக தெரிவித்தார். (முன்பே எல்லாம் பேசிகொடுக்கல், வாங்கல் எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள் பார்வர்ட் பிளாக்கட்சியினர்)
பின்னர் செய்தியாளர்களிடம் முருகன்ர் பேசுகையில், தேனி மாவட்ட மக்களின்நல்வாழ்வுக்குப் பாதுகாப்பாக முதல்வர் இருந்து வருகிறார். எத்தனையோ பல நல்லதிட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
எனவே தான் போட்டியிலிருந்து விலகி விட்டேன்.
நானும், எனது கட்சி நிர்வாகிகளும் தினகரன் முன்னிலையில் அதிமுகவில்இணையவுள்ளோம் என்றார்.
இதேபோல தேனி தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் கதிரேசனும்போட்டியிலிருந்து விலகி அதிமுகவில் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை முன்பே கார்த்திக் தரப்பு எதிர்பார்த்தது என்பதும்குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு மிரட்டல் தரப்பட்டு வாபஸ்பெற வைக்கப்படலாம் என்பதால்தான் தான் மாற்று வேட்பாளராக நிற்க கார்த்திக்முடிவு செய்திருந்தார்.
ஆனால் அவரால் அங்கு வேட்பு மனுவே தாக்கல் செய்ய முடியவில்லை. மனுதாக்கலுக்கு கடைசி நாளன்று கார்த்திக் திடீரென காணாமல் போனார்.
அவரை கடத்திச் சென்று வைத்திருந்து மனு தாக்கலுக்கான டைம் முடிந்த பின்னரேவெளியில் விட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், தன்னை யாரும் கடத்தவில்லைஎன கார்த்திக் திட்டவட்டமாக மறுத்தார்.
மொத்தத்தில் தற்போது ஆண்டிப்பட்டி தொகுதியில் பார்வர்ட் பிளாக் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications