கருணாநிதிதான் பணக்கார வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே திமுக தலைவர்கருணாநிதிதான் பணக்கார வேட்பாளர் என்று தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, பரிசீலனையும்முடிந்து விட்டது. 24ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற அவகாசம்கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல்வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வேட்பு மனு தாக்கல் செய்வோர் தங்களதுமனுவுடன் தங்களது சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில் தற்போதைய தேர்தலிலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதில், ஏராளமான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்முக்கியமான விஷயம் என்னவென்றால் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் யார் தெரியுமா? திமுக தலைவர்கருணாநிதிதான்.

அவரது சொத்து மதிப்பு ரூ. 26.53 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது இடத்தைப் பிடித்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா அவரது சொத்து மதிப்பு ரூ.25 கோடி.

மிக ஏழ்மையான வேட்பாளர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில்போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளரானதேன்மொழிதான். இவரது சொத்து மதிப்பு வெறும் 94 ரூபாய் 15 காசுதான்.

ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள முக்கால்வாசி அமைச்சர்கள்கோடீஸ்வரர்களாக உள்ளனர். அனைவரும் கோடிக்கணக்கில் சொத்துக்களைக் கணக்குகாட்டியுள்ளனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் மாதிரியான நபர்கள் டீக்கடை வைத்து டீஆத்திக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால் அவர்களில் ஏழ்மையானவர் ஆதி திராவிடர் நிலத்துறை அமைச்சரும்,சங்கரன்கோவில் (தனி) தொகுதி வேட்பாளருமான கருப்பசாமிதான். இவர் தனதுசொத்து மதிப்பு ரூ. 1.30 லட்சம், ஒரு அம்பாசடர் கார் என்று காட்டியுள்ளார்.

அம்மா ஆட்சியில் அமைச்சர் ஒருவர் வறுமையில் வாடுவது ஆச்சரியமாகத்தான்உள்ளது.

நடிகர் விஜயகாந்த், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன், பொன்முடி, .க.ஸ்டாலின், நெப்போலியன் ஆகியோர் குறிப்பிடத்தக்ககோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர்.

வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி தனது சொத்தாக வங்கியில் போடப்பட்டுள்ள ரூ.3.40 லட்சம் பணத்தையும், சூரமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டையும் கணக்குகாட்டியுள்ளார். ஆனால் இந்தப் பணத்தை போலீஸார் முடக்கி வைத்துள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+