உயிருக்குப் போராடும் பிரமோத் மகாஜன்
மும்பை:
தனது தம்பி பிரவீன் மகாஜனால் சுடப்பட்ட பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் நிலைமை தொடர்ந்துகவலைக்கிடமாகவே உள்ளது. உயிருக்கு அவர் போராடி வருகிறார்.
மும்பை வோர்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அவரை சுட்டார் பிரவீன்.இதில் கல்லீரல், கணையம், சிறுகுடல் ஆகியவற்றில் குண்டுகள் பாய்ந்தன. இதனால் உடலுக்குள்ளேயே பெரும்அளவில் ரத்தம் வெளியேறியது.
உடலுக்குள் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க இந்துஜா மருத்துவமனையில் 4 மணி நேர அறுவை சிகிச்சைநடந்தது. இதில் கல்லீரலில் இருந்து ரத்தம் வெளியேறுவது சற்று குறைந்துள்ளது. ஆனால், குண்டுகள்அகற்றப்படவில்லை.
இன்று காலை மகாஜன் லேசாக கண்களையும் கைகளையும் அசைத்ததாகவும், ஆனால், அவர் தொடர்ந்துமோசமான நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது சிறுநீரகத்தின் செயல்பாடும்பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது கல்லீரல் பெரிதும் சேதமடைந்துவிட்டதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டனில் இருந்து முகம்மத் ரேலா என்ற உலகப் புகழ்பெற்ற கல்லீரல்அறுவை சிகிச்சை நிபுணர் மும்பை வரவழைக்கப்பட்டுள்ளார்.
அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் இதுவரை 25 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
57 வயதான பிரமோதுக்கும் அவரது இளைய சகோதரர் பிரவீனுக்கும் சில காலமாகவே உறவு சரியில்லை என்றுதெரிகிறது. தனது வளர்ச்சிக்கு அண்ணன் உதவவில்லை என்றும், அவரை சந்திக்க அவரது செயலாளர்கள் மூலமேபோக வேண்டிய நிலை இருந்ததாகவும் போலீசில் துப்பாக்கியுடன் சரணடைந்த பிரவீன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications