திமுகவுக்காக நாளை முதல் டி.ஆர் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இயக்குனர் விஜயடி.ராஜேந்தர் நாளை முதல் பிரசாரம் செய்கிறார்.

அதிமுக கூட்டணியில் கதவு சாத்தப்பட்டு விட்டதால் கடுப்பாகிப் போன விஜயடி.ராஜேந்தர் 11 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார். அந்தத்தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று திமுககூட்டணிக்குப் பிரசாரம் செய்ய முன் வந்தார்.

இந் நிலையில் ராஜேந்தரின் பிரசாரத் திட்டத்தை திமுக தலைமைக் கழகம்அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை மாலை சென்னையில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்ராஜேந்தர். ஆர்.கே.நகர், ராயபுரம், பூங்காநகர் (டி.ஆர். வென்ற தொகுதி), ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மைலாப்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார் ராஜேந்தர்.

25ம் தேதி விளவங்கோடு, திருவட்டாறு, பத்மநாபபுரம், குளச்சல், நாகர்கோவில்,கன்னியாகுமரி,

26ம் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி,27ம் தேதி அருப்புக்கோட்டை, கடலாடி, துகுளத்தூர், இளையாங்குடி, சிவகங்கை,திருப்பத்தூர்,

28ம் தேதி அறந்தாங்கி, புதுக்கோட்டை, விராலிமலை, மருங்காபுரி, திண்டுக்கல், 29ம்தேதி முசிறி, தொட்டியம், லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர்,

30ம் தேதி தஞ்சை, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டனம்;

மே 1ம் தேதி புதுவை, காரைக்கால், 2ம் தேதி ஆண்டிப்பட்டி, கம்பம், தேனி,பெரியகுளம், பழனி, 3ம் தேதி பொள்ளாச்சி, பேரூர், பல்லடம், திருப்பூர், அவிநாசி,கோவை, பெருந்துறை, பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம்,

5ம் தேதி ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை,6ம் தேதி ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் ராஜேந்தர் பிரசாரம் செய்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+