நாங்க ரெடி.. நீங்க ரெடியா?-வைகோ சவால்

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு:

என்னுடைய பிரசார பலத்தால் ஜெயித்த திமுக எம்.பிக்கள் முதலில் ராஜினாமாசெய்யட்டும், பின்னர் மதிமுக எம்.பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமாசெய்வார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.திருச்செஙகோட்டில் அவர் பேசுகையில்,

ஜெயலலிதா செல்கிற இடமெல்லாம் தாய்மார்களும், ஆண்களும், ஆர்பரித்துவருகிறார்கள், அலைகடலென தமிழகமே அவர் பின்னால் திரண்டு வருகிறது. இதைபார்த்து திமுக தலைவர் கருணாநிதி உள்ளுக்குள் மிரண்டு போய் இருக்கிறார். அதைஅவரால் வெளிக்காட்ட முடியாது.

இதனால்தான் ஒரு நாளும் இல்லாத திருநாளாய், கூட்டணி ஆட்சிக்குத் தயார் என 3நாட்களுக்கு முன்பு கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சிக்கு கலைஞர் தயாராக இருக்கலாம்,ஆனால் அவர்களிடம்ஆட்சியைக் கொடுக்க மக்கள் தயாரில்லையே, அதிமக ஆட்சி நீடிக்க வண்டும்என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

ஏன் அதிமுகவுக்குப் போனீர்கள் என்று கேட்கிறார் ப.சிதம்பரம். 1978ல் திமுகஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ், 1991ல் திமுக ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ்,திமுக சார்ந்திருந்த ஐக்கிய முன்னணி அரசைக் கலைத்தது காங்கிரஸ்.

ஏன் மிசாவில் திமுககாரர்கள் என்ன துன்பத்துக்கு ஆளானார்கள். இன்று திமுகவும்,காங்கிரஸும் கூட்டணி வைக்கவில்லையா?

கேரளாவில் காங்கிரஸை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்டுகள் தமிழகத்தில்கூட்டணி வைக்கவில்லையா?

தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக நான் வாதாடுகிறேன். 20 கிலோ அரிசியை ஒரேதவணையில் வாங்க மக்களிடம் பணம் இல்லை என்கிறார் கருணாநிதி.அப்படியானால் இவர் இலவசமாக கொடுக்கப் போகும் டிவிக்கான மின்சார பில்லையார் செலுத்துவார்கள்?

அதற்குரிய கேபிள் இணைப்புக்கு யார் பணம் தருவார்கள்? இலவசமாக கொடுக்கப்போகும் காஸ் அடுப்புக்கு, ரூ. 400 கொடுத்து யார் சிலிண்டர் வாங்கித் தருவார்கள்?

இதற்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதாதான் முடிவு கட்டியுள்ளார். சாலையோரம்வசிப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் நலனுக்காக 10 கிலோ அரிசியை இலவசமாகதருவதாக கூறியுள்ளார் ஜெயலலிதா.

இது சாத்தியமில்லாத அறிவிப்பா? இந்த அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. இதனால்தான் ஆடிப் போயுள்ளார் கருணாநிதி.

தமிழகத்தில் இன்று யாருமே வேறு எந்தத் தொழிலையும் செய்ய முடியவில்லை.அந்த அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னைவிமான நிலையத்தை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படி தமிழ்நாட்டில் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டும் கருணாநிதி குடும்பத்தால்தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, திமுக தொண்டனுக்கும்தான் ஆபத்து.

72ல் துரத்தப்பட்ட புரட்சித் தலைவரின் தொண்டர்களும், 93ல் அநீதி இழைக்கப்பட்டவைகோவின் உடன் இருப்பவர்களும் இன்று ஒரே அணியில் இருக்கிறோம். நாங்கள்ஒரு கொடியில் பூத்த மலர்கள்.

எங்களுடைய ஆதரவால்தான் மதிமுகவுக்கு 4 எம்.பிக்கள் கிடைத்தார்கள். அதைராஜினாமா செய்து விட்டு அப்புறம் பேசட்டும் என்று திமுகவினர் கேட்கிறார்கள்.சவாலை ஏற்கிறேன். ஆனால் நாங்களும் வெற்றிக்கு உழைத்திருக்கிறோம்.

திமுக கூட்டணியின் அசுர வெற்றிக்கு காரணம் என நான்கு விஷயங்களை அத்தனைபத்திரிக்கைகளும் எழுதின. அதில் ஒன்று வைகோவின் பிரசாரம் என்று இருந்தது.எனவே நீங்களும் ராஜினாமா செய்யுங்கள், நாங்களும் ராஜினாமா செய்கிறோம்,மீண்டும் மக்களிடம் போகலாமா, ரெடியா? என்று கேட்டார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+