சுயேச்சையான ஆண்டிப்பட்டி தேமுதிக வேட்பாளர்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேசிய மற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சந்திரன்சரியான முறையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யாததால் அவர் சுயேச்சைவேட்பாளராக கருதப்படுவார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஆண்டிப்பட்டி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வேட்பு மனுவைமுறையாகத் தாக்கல் செய்யவில்லை. மனுவில் படிவம் ஏ மற்றும் பிஆகியவற்றுக்கான அசல் இணைக்கப்படவில்லை. நகல் படிவங்கள்தான்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஏ படிவம் என்பது கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் ஆகியோரில்ஒருவர் கட்சியின் நிர்வாகிக்கு, வேட்பாளரின் பெயரைத் தெரிவிப்பதற்கானஅதிகாரத்தை தெரிவிப்பதாகும்.
பி படிவம் என்பது, வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அந்தக் கட்சியின்அதிகாரப்பூர்வ வேட்பாளர் தான் என்பதையும் மாற்று வேட்பாளரையும்அறிவிப்பதைக் குறிக்கும்.
இந்த இரண்டையும் அசலாக வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும்.
இதைச் செய்யாத காரணத்தால் ஆண்டிப்பட்டி தே.மு.தி.க. வேட்பாளர் அக்கட்சிவேட்பாளராக கருதப்பட மாட்டார்.
சுயேச்சை வேட்பாளராகத்தான் கருதப்படுவார் என்றார் நரேஷ்குப்தா.
அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவும் வகையில்தேமுதிக வேட்பாளர் வேண்டுமென்றே இவ்வாறு அரைகுறையாக தனதுஆவணங்களை சமர்பித்திருக்கலாம் என அந்தக் கட்சியினர் மத்தியிலேயே சந்தேகம்எழுந்துள்ளது.
கார்த்திக் கட்சி வேட்பாளரை வளைத்தது போலவே விஜய்காந்தின் வேட்பாளரையும்அதிமுக சரி செய்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
பாமக எம்.எல்.ஏ. நீக்கம்:
எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளஅத்தொகுதியின் பாமக எம்.எல்.ஏ. கணேசன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் பாமக எம்.எல்.ஏ. கணேசன்.இத்தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற கணேசன் இம் முறையும் தனக்கே சீட்கிடைக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரைக் கட்சியிலிருந்து நீக்கி பாமக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சு. மூக்கையா வெளியிட்டுள்ளஅறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும்வகையில் செயல்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர் ஐ.கணேசன்,
நகரச் செயலாளர் செங்குட்டுவன், நகரத் தலைவர் ரமேஷ் ஆகியோர் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications