அதிமுகவில் இணைந்த 3 தேமுதிக வேட்பாளர்கள்!
கோவை:
விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பல்வேறு மாவட்டத்தலைவர்கள், செயலாளர்கள், கட்சியின் 3 வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரத்திற்குக்கிளம்பும் ன்பு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில்அதிமுகவில் இணைந்தனர். தே.மு.தி.கவைச் சேர்ந்த 2,000 பேர் கட்சியில்இணைந்தனர்.அதில், தே.மு.தி.கவின் நெல்லை மாவட்ட தலைவரும், கடையநல்லூர்வேட்பாளருமான கணபதி ராமசுப்ரமணியம்,
மதுரை மாவட்ட தலைவர் முத்து, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிடிஆர்ராஜகோபால், பொருளாளர் காதர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜேசுராஜன்,விருதுநகர் மாவட்டத் தலைவர் ரத்தினகுமார்,
நாகை மாவட்ட தலைவர் உதயராமன், கரூர் தலைவர் விஸ்வநாதன், புதுக்கோட்டைமாவட்டத் தலைவர் ராஜேந்திரன், அவரது மனைவி தீபா ராஜேந்திரன்,
அம்பாசமுத்திரம் வேட்பாளர் சையத் அலி பாத்திமா, பாளையங்கோட்டை வேட்பாளர்மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
![]() |
அதிமுகவில் நடிகை கவிதா:
இவர்கள் தவிர பிரபல தமிழ், தெலுங்கு நடிகை கவிதா, கதாசிரியர் கலைஞானம், நடனஇயக்குனர் சிவசங்கர் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.













Click it and Unblock the Notifications