32 லட்சம் பேருக்கு வேலை: ஜெ. மீண்டும் உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 32 லட்சம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புஅளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
கோவை உக்கடம் பகுதியில் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் நிலை நகரங்களில் புதிய சிறுதொழில் கூடங்கள்அமைக்கப்படும். 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இந்த அரசு எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளது. இலவச பாடப் புத்தகம், இலவச சைக்கிள், குடிசைகளுக்குஇலவச மின்சாரம், வீரப்பனை ஒழித்தது என்று எவ்வளவோ சொல்லலாம்.
மேலும் எத்தனையே நல்ல திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறோம். இதனால் உங்கள் அன்புச் சகோதரியின்அரசு மீண்டும் அமைய வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications