ஜெவுக்கு வாக்களித்தால் பாவம்-காஞ்சி பக்தர்கள்
சென்னை:
ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் அது பாவம் என காஞ்சி சங்கரர் பக்தர்கள் பேரவை கூறியுள்ளது.
காஞ்சி சங்கர பக்தர்கள் பேரவை சார்பில் வளவை கி.ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கை:காஞ்சி மடத்தையும் அதன் பீடாதிபதிகளையும் வழக்குப் போட்டும், தனிப்பட்ட முறையிலும் கொச்சைப்படுத்தியஜெயலலிதாவை பிராமண சமூகம் இன்னும் மறக்கவில்லை.
காஞ்சி மடம் என்பது மடமே அல்ல. அது பிணம் புதைக்கப்பட்ட இடம், கேபிள் கனெக்ஷன் எல்லாம் கொண்டஒரு குடியிருப்பு என்று ஜெயலலிதா சொன்னதை பிராமண சமுதாயம் மன்னிக்காது.
மலையாள மாந்த்ரீகர்களின் பேச்சைக் கேட்டு உச்சி வெயில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் பக்தர்களை வாட்டிஎடுக்கும் ஜெயலலிதாவுக்கும் அவரது அரசுக்கும் பிராமண சமூகத்தினர் வாக்களிக்க மாட்டார்கள்.
கடந்த இரு வருடமாக குரு துரோகம், இன துரோகம் செய்த ஜெயலலிதாவுக்கு பிராமண மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். அப்படி வாக்களித்தால் அது பாவம் என்பதும் அந்தச் சமூகத்தினருக்குத் தெரியும் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications