பிரமோத் மகாஜனுக்கு சென்னையில் பாஜக யாகம்
சென்னை:
தம்பியால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள பாஜக மூத்த தலைவர்பிரமோத் மகாஜன் விரைவில் நலம் பெற வேண்டி சென்னையில் பாஜகவினர் சிறப்புயாகம் நடத்தினர்.
மும்பை இந்துஜா மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளமகாஜனுக்கு நேற்றிரவு மீண்டும் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.பாதிக்கப்பட்டுள்ள சிறுநீரகத்தில் இருந்து நீரை வெளியேற்ற அந்த அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது.
கல்லீரலில் இருந்து ரத்தம் வெளியேறுவதும் பெருமளவுக்கு நின்றுவிட்டது. இதனால்அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கவலைக்கிடமாகவே உள்ளார்.
இந் நிலையில் பிரமோத் மகாஜன் விரைவில் நிலம் பெற வேண்டும் என்பதற்காகதமிழக பாஜக சார்பில் சென்னையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதில் அகில இந்திய செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா, திருநாவுக்கரசர், மாநிலபொருளாளர் சக்கரவர்த்தி, சுகுமாரன் நம்பியார், கே.என்.லட்சுமணன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
பாஜக அகில இந்திய துணைத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகாஜனை நான் சென்றுபார்த்தேன். அவர் இன்னும் அபாய நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகாஜன் உடல் நலம் பெற வேண்டி தொடர்ந்து யாகங்களும், சிறப்பு பூஜைகளும்நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications