கிரைண்டர் குடுப்பீங்களா?: ராமராஜன் நக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கலர் டிவி கொடுப்பது போல வாஷிங் மெஷின், கிரைண்டர், தையல் மிஷன் எனவீட்டில் என்ன பொருள் இல்லையோ அதை இலவசமாக கொடுக்கலாமே என்று என்றுநடிகர் ராமராஜன் கருணாநிதிக்கு யோசனை கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

1 ரூபாய் (போன்) வழியில் பேரன், 2 ரூபாய் (கிலோ அரிசி 2 ரூபாய்) வழியில்தாத்தா, அடுத்து மகன் 3 ரூபாய் வழியில் என்ன சொல்லப் போகிறாரோ?

சுனாமி வந்தபோது மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டவர் கருணாநிதி.இன்றைக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க கலர் டிவி, 2 ரூபாய்க்கு கிலோஅரிசி என வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில், என்னிடம் கலர் டிவி உள்ளது, வாஷிங் மெஷின்தருவீர்களா என்று ஒரு பாட்டி கருணாநிதியை மடக்கியுள்ளார். எனது கேள்வியும்அதுதான்.

யார் வீட்டில் என்ன இல்லையோ அதை இலவசமாக தருவதாக அறிவிக்கவேண்டியதுதானே, அது என்ன கலர் டிவி மட்டும்? தையல் மிஷன் கொடுக்கலாம்,வாஷிங் மெஷின் கொடுக்கலாம், மாவாட்ட கிரைண்டர் கொடுக்கலாம்.

அம்மாவுக்கு ஓட்டுப் போட்டால் வட்டியுடன் பணம் வரும், இது வங்கி மாதிரி.கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டால் சிட்பண்ட் மாதிரி, திவாலாக வேண்டியதுதான்என்றார் ராமராஜன்.

வீட்டுக்கு ஒரு பசு மாடு தருவேன் என்று விஜய்காந்த் கூறியிருக்கிறாரே.. அதை பத்திஉங்க கருத்து என்ன ராமராஜன் சார்.?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+