திமுகவில் எனக்கு வேலையே தரவில்லை-சரத்குமார்
கன்னியாகுமரி:
திமுகவில் யாருக்குமே என்னைப் பிடிக்கவில்லை. அப்படி இருக்கையில் என்னால்எப்படி அங்கு நீடிக்க முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து அதிமுகவுக்கு கட்சி மாறிய சரத்குமார் கன்னியாகுமரியில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,எனக்குத் தேவையானது வாழ்க்கையில் மரியாதை மட்டும்தான். அது திமுகவில்எனக்குக் கிடைக்கவில்லை. திமுகவில் எனக்குப் பல குறைகள், வருத்தங்கள்இருந்தன. அவற்றையெல்லாம் கலைஞரிடம் கூறியும் நிவாரணம் கிடைக்கவில்லை.
மறுபக்கம் தயாநிதி மாறன் போன்றவர்கள். திமுகவில் யாருக்குமே என்னைப்பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட இடத்தில் எப்படி இருக்க முடியும். கட்சியில் எனக்குஎந்த வேலையும் கொடுக்கவில்லை.
வேலை கொடுக்காத இடத்தில் சும்மா இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. கத்தியைகொஞ்சமாவது தீட்ட வேண்டும், இல்லாவிட்டால் துருப் பிடித்து விடும்.துருப்பிடித்துப் போக நான் விரும்பவில்லை. அதனால்தான் விலகி விட்டேன்.
எனது சமுதாய மக்கள் என்னிடம் அன்பாகத்தான், ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சில பிரச்சினைகள்,கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.
நமக்குள் ஒற்றுமை வேண்டும். நமது சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றதைஎடுத்துறைக்கிற இயக்கமாக அதிமுக இருக்கும். எனது ரசிகர்கள் என்னுடன்தான்இருப்பார்கள், நான் இருக்கிற கட்சியில்தான் அவர்களும் இருப்பார்கள் என்றார்சரத்குமார்.
சரத் மீது இந்திரகுமாரி தாக்கு:
இந் நிலையில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய வேட்டி, சேலை ஊழல்புகழ் மாஜி மந்திரி இந்திரகுமாரி சென்னை புழல் பகுதியில் திமுகவுக்காக பிரச்சாரம்செய்கையில்,
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது முதலில் கட்சியில் சேர்ந்தவள் நான். 35 வருடம்அங்கிருந்தேன். ஆனால், எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு அதிமுகவில் இடமில்லைஎன்பதால் விலகினேன்.
சன் டிவியில் முகத்தைக் காட்டவில்லை என்று சொல்லி ஜெயலலிதாவிடம் ரூ. 40கோடியை வாங்கிக் கொண்டு விலைபோன வைகோ மீது மக்களுக்கு இருந்தமரியாதை சுத்தமாகப் போய்விட்டது. ஓடிப் போன நாடோடி மாதிரி அலைகிறார்வைகோ.
அதே மாதிரி எங்கோ இருந்த சரத்குமாரை எம்பி ஆக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.ஆனால், ரூ. 20 கோடிக்கு ஜெயலலிதாவிடம் விலை போய்விட்டு, அவரை நம்பியநாடார் சமுதாயத்தையும் நடுத் தெருவில் விட்டுவிட்டார். அவரை நாடார்கள்மன்னிக்கே மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications