டி.ராஜேந்தருக்கு ஆதரவாக சிம்பு பிரசாரம்!
சென்னை:
இயக்குனர் விஜய டி.ராஜேந்தருக்கு ஆதரவாக அவரது மகனும், நடிகருமான சிம்புமயிலாடுதுறை தொகுதியில் நான்கு நாள் பிரசாரம் செய்யவுள்ளார்.
ராஜேந்தரின் லட்சிய திமுக சட்டசபைத் தேர்தலில் 11 தொகுதிகளில்போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராஜேந்தர் இன்று முதல் தீவிரப்பிரசாரத்தில் குதிக்கிறார்.இந் நிலையில் ராஜேந்தருக்கு ஆதரவாக அவரது மகனும், நடிகருமான சிம்புமயிலாடுதுறை தொகுதியில் நான்கு நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதை ராஜேந்தர்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராஜேந்தர் கூறுகையில், 11 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தோம்.ஆனால் அது தற்போது 9 ஆகி விட்டது. செய்யாறு தொகுதி வேட்பாளரின் மனுதள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. திருவாடானை தொகுதி வேட்பாளர் சொந்தக்காரணங்களால் போட்டியிட மடியவில்லை.
எனக்கு அரசியல் குரு கருணாநிதி. எனவே அவரது கோரிக்கையை ஏற்று நாங்கள்போட்டியிடாத தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறேன். அதேபோலசிம்புவுக்கு நான் குரு. அந்த அடிப்படையில் என்னை ஆதரித்து மயிலாடுதுறையில்அவர் பிரசாரம் செய்கிறார்.
வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரசாரத்தில் சிம்பு ஈடுபடுகிறார்.
வீட்டுக்கு வீடு மாடு கொடுப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளார். அந்த மாடுகளைக் கட்டஇடம் கொடுப்பாரா என்பதையும் அவர் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications