மதுரை, சென்னையில் சோனியா நாளை பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறும்பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

திமுக கூட்டணியின் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியும் தமிழகம் வந்து திமுக கூட்டணிக்காக பிரசாரம்செய்யவுள்ளார்.

முதலில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து சென்னை வருகிறார். பின்னர்அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை செல்கிறார். அங்கு போட்டியிடும்காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து உப்பளம் துறைமுகத்திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

புதுவை பிரசாரக் கூட்டத்தைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. புதுவை கூட்டத்தை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பும்சோனியா மாலை 3.30 மணிக்கு மதுரை செல்கிறார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். இக்கூட்டத்தில் சோனியாவுடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும்கலந்து கொள்கிறார்கள்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் மீண்டும் சென்னை திரும்பும் சோனியா, இரவு தீவுத்திடலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இக்கூட்டத்தில் திமுகதலைவர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், தயாநிதிமாறன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காதர் மொஹைதீன் உள்ளிட்ட தலைவர்களும்கலந்து கொள்கின்றனர்.

சென்னை கூட்டத்தை முடித்துக் கொண்டு சோனியா மீண்டும் டெல்லி திரும்புகிறார்.சோனியாவைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மே 4ம் தேதி தமிழகம் வருகிறார்.சென்னையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசவுள்ளார்.

லாலுவும் வருகிறார்:

இதற்கிடையே திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மத்தியரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மே மாதம் தமிழகம் வரவிருப்பதாகராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியுள்ளது.

இக்கட்சியின் மாநிலத் தலைவர் கேசவன் மதுரையில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

ராஷ்ட்ரீய ஜனதாதளம் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. எங்களது கட்சி எந்த தொகுதியிலும் போட்டியிடாவிட்டாலும் கூட,திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யலாலு பிரசாத் வருகை தருகிறார்.

மே மாதம் முதல் வாரம் தமிழகம் வரும் லாலு பிரசாத், சென்னை, மதுரை, திருச்சியில்நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+