காலுக்கு செருப்பாக இருப்பேன்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்தால் மக்களின் காலுக்கு செருப்பாக இருந்துசெயல்படுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், திமுகதேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயம்நிறைவேற்றப்படும்.

வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள்உருவாக்கப்படும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுமையாக தள்ளுபடிசெய்யப்படும்.

கலர் டிவி திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம். அதுகுறித்து நிறையவிளக்கியுள்ளேன். அதுகுறித்து வைகோ விமர்சித்துப் பேசி வருவது குறித்து நமக்குகவலை இல்லை.

2 ரூபாய்க்கு தரமான 1 கிலோ அரிசி தருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுஎப்படி சாத்தியம் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதுகுறித்து நமக்கு கவலைஇல்லை. நாம் சொன்னைதச் செயவோம், செய்வதைத்தான் சொல்வோம்.

நம்மை விமர்சித்தவர்கள் என்று 10 கிலோ அரிசியை இலவசமாக தரப் போவதாககூறுகிறார்கள். அது மட்டும் எப்படி சாத்தியம்?

ஐந்தாவது மறை முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்பதற்காக நான் இந்தவாக்குறுதிகளை அளிக்கவில்லை. சொன்னதைச் செய்வேன். நான் பார்க்காதபதவியா? பதவியை நான் பெருமையாக கருதவில்லை. மக்களுக்கு சேவையாற்றகிடைக்கும் வாய்ப்பாகவே எண்ணுகிறேன்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் காலுக்கு செருப்பாக இருந்து சேவைசெய்வேன் என்றார் கருணாநிதி.

மகாஜன் நலம் பெற வாழ்த்து:

இதற்கிடையே தம்பியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் விரைவில் நலம் பெற திமுக தலைவர்கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மகாஜன் மனைவிக்கு அனுப்பியுள்ள தந்தியில்,

பிரமோத் மகாஜன் சுடப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. வேதனைஅடைந்துள்ளேன். விரைவில் அவர் நலம் பெற்று, சுகம் பெற்று வழக்கமான அரசியல்பணிகளில் ஈடுபட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+