அதிமுகவில் எஸ்.எஸ்.ஆர்- விசுவும் சேருகிறார்!
சென்னை:
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில்அதிமுகவில் இணைந்தனர்.
பராசக்தி திரைப்படம் மூலம் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகுக்குஅறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று அழைக்கப்படும்எஸ்.எஸ்.ஆர். தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்நநிடிகர் என்றபெருமையைப் பெற்றவர்.ஆரம்பத்தில் திமுகவிலும் பின்னர் எம்ஜிஆருடன் நீண்ட காலம் அதிமுகவில் இருந்தஅவர் ஜெயலலிதா தலைவரானதும் அதிலிருந்து விலகி திருநாவுக்கரசர் தொடங்கியகட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.
பின்னர் திருநாவுக்கரசர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தபோது எஸ்.எஸ்.ஆரும்அதிமுகவில் இணைந்தார். ஆனாலும் பின்னர் அதிமுகவிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில், தற்போது குடும்பத்தோடு மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்ராஜேந்திரன். மனைவி தாமரைச்செல்வி, மகன் நடிகர் கண்ணன் ஆகியோருடன்ஜெயலலிதாவை கோபிச்செட்டிப்பாளையத்தில் சந்தித்த ராஜேந்திரன் அங்குஅதிமுகவில் இணைந்தார்.
அவர்களுக்கு ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளிலிருந்து சட்டசபைக்குஇருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட எஸ்.எஸ்.ஆர் விரும்பினார்.ஆனால் அவருக்கு எம்.ஜி.ஆர். டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கட்சியிலிருந்துவிலகி கொஞ்ச காலம் தனிக் கட்சி நடத்தி வந்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதேபோல, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்ஏ.எல்.அழகப்பனும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இருந்து வந்த இவர் தீவிர கருணாநிதி ரசிகர் ஆவார். அப்படி இருந்த இவர்சன் டிவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் திமுகவிலிருந்து விலகினார். அதிமுகவுக்குஆதரவாக செயல்படத் தொடங்கினார்.
சமீபத்தில் சன் டிவிக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தபல அதிரடியான முடிவுகளுக்குப் பின்னால் அழகப்பன் இருந்தார்.
இந் நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துஅழகப்பன் அதிமுகவில் இணைந்தார்.
விசுவும் ஐக்கியம்:
இதற்கிடையே சன் டிவியில் அரட்டை அரங்கம் நடத்தி வரும் நடிகர், இயக்குனரானவிசு இன்று அதிமுகவில் ஐக்கியமாவார் என்று தெரிகிறது.
ஈரோட்டில் வைத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் அவர்சேருகிறார்.
அதிமுகவில் சேர்ந்துள்ள ராதிகாவின் நிகழ்ச்சிகள் ஜெயா டிவிக்கு மாறப் போகும்நிலையில், விசுவின் அரட்டை அரங்கமும் இதன்மூலம் ஜெயாவுக்கு ஷிப்ட் ஆகவாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
