சிம்ரனின் பனானா பிரசாரம்!
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் தாவூத் மியாகானை ஆதரித்து அவரதுசின்னமான வாழைப் பழத்துடன் நடிகை சிம்ரன் பிரசாரம் செய்தார்.
கிராமப் பகுதிகளுக்கு சிம்ரனை அழைத்துச் செல்ல முடியாத நிலைக்கு அதிமுகவினர்தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களை ஒட்டிய சிறிய நகர்களில் தங்குவதற்கு போதியவசதி இல்லை என்று கூறி முரண்டு பிடிக்கும் சிம்ரன் நகர்ப் பகுதிகளிலேயே பிரச்சாரம்செய்து வருகிறார்.
இந் நிலையில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிவேட்பாளரான மியாகானை ஆதரித்து அவரது தேர்தல் சின்னமானவாழைப்பழத்துடன் சிம்ரன் பிரசாரம் மேற்கொண்டார்.
![]() |
கையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அதைக் காட்டி சிம்ரன் ஆதரவுதிரட்டினார். திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்ற சிம்ரன், உங்கள் சின்னம்வாழைப்பழம், உங்கள் வேட்பாளர் மியாகான் என்று கூறி வாக்கு திரட்டினார்.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் இந்தியில் பேசியும் வாக்குசேகரித்தார். வாழைப்பழத்துடன் வந்த சிம்ரனை ஏராளமானவர்கள் திரண்டுவேடிக்கை பார்த்தனர்.
முன்னதாக மயிலாப்பூர், தி.நகர், ஆயிரம் விளக்கு,திருவல்லிக்கேணி, புரசைவாக்கம்,அண்ணா நகர், பெரம்பூர், பூங்காநகர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம் ஆகியதொகுதிகளிலும் சிம்ரன் பிரசாரம் மேற்கொண்டார்.
டப்பிங் சரளா:
இதற்கிடையே அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகை கோவை சரளா டப்பிங் பேசுவது போல ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு கீச்சுக்குரலில் கத்திக் கத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதுவும் எப்படி அந்த டப்பிங் பேப்பரை அவரது உதவியாளர் கையில் ஏந்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே படிப்பார் கோவை சரளா.
அப்படியாக, சேலம் பானைமரத்துப்பட்டியில் கோவை பேசியதாவது:
![]() |
பெட்டி வாங்கிக் கொண்டு அதிமுகவுக்குப் போய்விட்டதாக எங்களைப் பார்த்துப் பேசுகிறார்கள். ஒரு கோடி கிடைத்ததா, ரெண்டு கோடி கிடைத்ததாஎன்கிறார்கள். கோடின்னா சும்மாவா?.
மேடையில் சிம்ரன், விந்தியா, கோவை சரளா எல்லாம் குலுக்கி மினுக்கி ஆடுவதாகப் பேசுகிறார் பாக்கியராசு. நாங்கள் அப்படித்தான்குலுக்குவோம். அது எங்க தொழில்.. ஹா..ஹா..ஹா.. என்றார்.
ஏ பாக்கியராஜுக்கு எஸ்.எஸ். சாபம்:
இதற்கிடையே பொள்ளாச்சியில் அமைச்சர் ஜெயராமனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில்,
பாக்கியராஜ் திமுக மேடைகளில் படு ஆபாசமாக பேசுகிறார். அப்படிப் பேசுகிற இவர் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?
ஏ படங்களாக எடுத்துக் கொண்டிருந்தார். அவர் இயக்கிய 70 படங்களில் 50 படங்கள் ஆபாசப் படங்கள்தான். அந்தப் படங்களுக்கு ஏ சர்டிபிகேட்கொடுத்துள்ளனர்.
நண்பர் என்ற முறையில் பாக்யராஜை எச்சரிக்கிறேன். கருணாநிதியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டால் விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்.
நான் 30 வருஷம் திமுகவில் இருந்தேன். என்னை ஒரு முறை கூட கவுன்சிலராகக் கூட ஆக்கவில்லை. ஆனால் அம்மாவோ, என்னைபாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் என்றார் சந்திரன்.














Click it and Unblock the Notifications