நாமெல்லாம் மடையர்களா?: இளங்கோவன் தாக்கு
திண்டிவனம்:
எம்ஜிஆர் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை, அதுவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே காதல்வருவது ஏன் என்று மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கேட்டார்.
திண்டிவனத்தில் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,ஜெயலலிதா சில நாட்களாக அதைத் தருகிறேன், இதைத் தருவேன் என்று திடீர் திடீரென அறிவிப்புகளைவெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை எல்லாம் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அதிமுகவை உருவாக்கி ஜெயலலிதாவையும் வளர்த்துவிட்ட எம்ஜிஆர் மீது இந்தம்மாவுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் காதல் வரும். அதுவும் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வரும்.
மத்தியில் மந்திரிகள் என்ன செய்தார்கள் என்று கேட்கும் ஜெயலலிதா பல சாதனைகள் புரிந்தவர். 15 நாளுக்குஒரு மந்திரி, 25 வயதில் ஒரு மகனை தத்தெடுத்தது இதெல்லாம் ஜெயலலிதா மட்டுமே படைக்கக் கூடியசாதனைகள்.
நல்லவர்களைப் பற்றி விமர்சித்தால் நல்ல விஷயம் இருக்கும். சில அசிங்கங்களைப் பற்றி விமர்சனம்செய்யும்போது அதுவும் அசிங்கமாகவே இருக்கும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications