கடத்தல்-கலாமிடம் எம்ஜிஆர் அண்ணன் மகள் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது கடத்தப்பட்டஎம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி அது குறித்து ஜனாதிபதி கலாமுக்கும், மத்திய தேர்தல்ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதி எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம்தானம் செய்தவர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற இவர் கடத்தப்பட்டார்.

இது குறித்து ஜனாதிபதி கலாம், தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சூளைமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு லீலாவதி ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்தேன். தேனி மாவட்டடி.ஆர்.ஓவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய 19ம் தேதி பூஜையை முடித்துவிட்டு காலை 7.30 மணிக்கு என்உறவினர் குமாரின் வீட்டிலிருந்து கிளம்பத் தயாரானேன்.

அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். வந்தவுடனே என் கைகளை முறுக்கினர்.கழுத்தை நெரித்தனர். முதுகிலும் முகத்திலும் குத்தினர்.

Leelavathi

நான் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று மிரட்டியபடியே என்னையும் குமாரையும் ஒரு வேனில்ஏற்றினர்.

மறுநாள் காலை வரை அந்த வேனிலேயே அடைத்து வைக்கப்பட்டேன். அது தொடர்ந்து எங்கெங்கோ போய்க்கொண்டே இருந்தது.

பின்னர் என்னை மட்டும் ராயப்பேட்டை அமீர் மகாலில் இறக்கி விட்டனர். குமாரை விடவில்லை.

வேட்பு மனு தாக்கல் முடியும் வரை இவன் எங்களுடன் தான் இருப்பான். உன்னைக் கடத்தியது குறித்து போலீஸ்,பத்திரிக்கைகளுக்கு சொன்னால் குமாரை தீர்த்துவிடுவோம் என மிரட்டிவிட்டுச் சென்றனர்.

நம்மால் குமார் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று அமைதியாக இருந்தேன். பின்னர் குமாரை வந்துமீட்டுச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் சொன்ன இடத்துக்குப் போனேன். ஆனால், மீண்டும்என்னை வேனில் ஏற்றிக் கொண்டனர்.

திங்கள்கிழமை காலை தான் விடுவித்தனர். காயங்களுடன் அவர்களிடம் இருந்து தப்பிய நானும் குமாரும்ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றோம்.

எங்களைக் கடத்தியவர்களை எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களை நிச்சயம் அடையாளம் காட்டமுடியும். இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் ஆகியோர் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் லீலாவதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+