சிவகங்கை சின்னப் பையன்: வைகோ தாக்கு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

ப.சிதம்பரம் இந்தியாவுக்கு நிதி மந்திரியா? இல்லை செட்டி நாட்டுக்கு மட்டும் நிதி மந்திரியா என்று வைகோகேள்வி எழுப்பினார்.

காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

நான் பிரச்சாரம் ஆரம்பித்த நாளில் இருந்தே மாபெரும் கூட்டத்தைப் பார்த்து வருகிறேன்.

டெல்லியிலே அரிசி விலைக்கு பச்சைக் கொடி காட்டி விட்டு தமிழ்நாட்டில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்குவோம்என்று கருணாநிதியோடு சேர்ந்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசுவது சுத்தமான பித்தலாட்டம்.

அவர் இந்தியாவுக்கு நிதி மந்திரியா? இல்லை செட்டி நாட்டுக்கு மட்டும் நிதி மந்திரியா? இது பற்றிக் கேட்டால்சிதம்பரத்துக்கு கோபம் வருகிறது. வைகோ அதிமுகவுக்கு பீஸ் வாங்காத வக்கீலா என்று கேட்கிறார்.

நான் சொல்கிறேன், ஆமாம். அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள். அதிமுகவின் ஈட்டி முனையில் இருக்கும்கவசம் தான் மதிமுக.

ஒரு முறை சிதம்பரத்திடம் நாடாளுமன்றத்தில் நான் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதிலை யாராலும் மறந்திடமுடியாது. தலைகீழாக நின்று பார்த்தால் எல்லாமே தலைகீழாகத் தான் தெரியும் என்று சிதம்பரம் பதில்சொன்னார். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தார்க்.

இப்படியெல்லாம் பேசிய சிதம்பரத்தை சிவகங்கை சின்னப் பையன் என்று கருணாநிதியே கூறியுள்ளார்.

கலர் டிவி கொடுப்பவர் கேபிள் கனெக்ஷனையும் தருவாரா என்று வைகோ கேட்கிறார் என்று கருணாநிதியிடம்பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளார்கள். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. கொடுத்துத் தொலைக்கிறேன்என்று பதலளித்துள்ளார் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+