பாஜக பிரசாரத்துக்கு தமிழகம் வரும் ராணிமுகர்ஜி
Subscribe to Oneindia Tamil
கோவை:
இந்தி நடிகை ராணி முகர்ஜி கோவையில் பாஜக வேட்பாளர்களைஆதரித்துப் பிரசாரம்செய்யவுள்ளார்.
அதிமுக மற்றும் திமுக சார்பில் ஏராளமான நடிகர், நடிகைகள் பிரசாரக் களத்தை கலக்கிவருகின்றனர். இப்போது பாஜகவும் கலையுலகினரை பிரசாரத்தில் இறக்கிவிட்டுள்ளது.
![]() |
இந்தியிலிருந்து நடிகை ராணி முகர்ஜி தமிழக பிரசாரத்திற்கு வரவுள்ளார்.
நாளை கோவை வரும் ராணி முகர்ஜி தொண்டாத்தூரில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் சின்னராஜுவை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மே 1ம் தேதி இதே தொகுதியில் பிரசாரம்செய்கிறார். தொண்டாத்தூர் தொகுதியில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை கணிசமாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணி முகர்ஜி தமிழகத்தின் வேறு பகுதிகளுக்குப் போவாரா என்பது குறித்துத்தெரியவில்லை.













Click it and Unblock the Notifications