ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!
திருப்பூர்:
நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறினார்.
திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார்.அவர் கூறியதாவது:வருடத்துக்கு ரூ. 6,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் திருப்பூர். ஆனால், நகராட்சிக்கு ரூ.40 கோடி மட்டுமே வரி கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்து திருப்பூருக்கு வேண்டிய பணிகளை செய்யமுடிவதில்லை.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாமல் திருப்பூர் மிக மோசமாக காட்சியளிக்கிறது. பாஜக வேட்பாளரைவெற்றி பெற வைத்தால் இதை மாற்றிக் காட்டுவோம். இந்த நகருக்குத் தேவையானது வரும்.
உலக வர்த்தக அமைப்புகளோடு இணைந்து திருப்பூரை வளமாக்கிக் காட்டுவோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் குட்டிச் சுவராக்கியவர் ஜெயலலிதா. நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும்,கவிழ்க்கவும் முடியும்.
ஜெயேந்திரரைக் கைது செய்ய ஜெயலலிதாவை மன்னிக்கவே கூடாது. இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும் என்றார்.
கூட்டமே இல்லாவிட்டாலும்..
முன்னதாக நேற்று சென்னை மைலாப்பூரில் ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை ஆதரித்து சுப்பிரமணியம்சுவாமி பிரச்சாரம் செய்தார்.
![]() |
சுவாமிக்கு பாதுகாப்புக்கு வந்த 10 போலீசார், ரோட்டோரம் கிட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 சிறுவர்கள்,ரோட்டில் நின்று கொண்டிருந்த சுமார் 10 பேர் என மொத்தமே சுமார் 20 பேர் தவிர சுவாமியைத் திரும்பிப்பார்க்க ஆளே இல்லை.
கேட்க ஆளே இல்லாவிட்டாலும் விடாமல் பிரச்சாரம் செய்தார் சுவாமி.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு













Click it and Unblock the Notifications