அன்னிய செலாவணி மோசடி: தினகரை கைது செய்ய உத்தரவிட்டது சரியே- உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சசிகலாவின் அண்ணன் மகன் தினகரனை காபிபோஸா சட்டத்தின் கீழ் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுசெல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக எம்பியாக உள்ள தினகரன் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். ரிசர்வ் வங்கியின்உரிய அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார் (இவருக்கு பணம் எங்கிருந்துவந்தது என்பது தனிக் கதை).

இது தொடர்பாக இவரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இதில் தினகரனின் சிங்கப்பூர், இங்கிலாந்துமுதலீடுகள் உறுதியாயின.

இதையடுத்து இவரை அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் (பெரா), அப்போது காபிபோஸா சட்டம், கைதுசெய்து பாதுகாப்புக் கைதியாக (பிரிவென்டிவ் டிடென்சன்) வைக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.

இந்தக் கைது உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தினகரன். அதில், நான் ஒருவெளிநாட்டு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) என்றும், தன்னைக் கைது செய்ய உத்தரவிட்டது செல்லாது என்றும்கூறியிருந்தார் (என்ஆர்ஐ எப்படி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் என்று தெரியவில்லை.)

தினகரனின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தினகரனின் மனைவி அனுராதா உச்ச நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் தினகரை கைது செய்ய உத்தரவிட்டதுசெல்லும் என உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் சீரியசானவை . பல நூறு கோடிரூபாயை ரகசியமாக, முறைகேடாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டுகளில் முதலீடு செய்துள்ளார். இவர்தன்னை என்ஆர்ஐ என்று கூறிக் கொள்வதை ஏற்க முடியாது.

இதனால் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புசரியானதே என்று கூறி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+