வெற்றி சிகரத்தை நோக்கி திமுக: கருணாநிதி
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படாது என்றுகருணாநிதி கூறியுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.எல்லீஸ்புரத்தில் தொடங்கிய அவரது பிரசாரம் பல்வேறு தெருக்களின் வழியாகசென்றது.பிரசாரத்தில் கருணாநிதி பேசுகையில், திமுக கூட்டணி வெற்றியின் சிகரத்தை நோக்கிநகர்ந்து கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத சிலர் தவறான பிரசாரங்களில்இறங்கியுள்ளனர்.
பெண்களிடத்திலே அவர்கள் நடத்துகின்ற பிரசாரம், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர்சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்பது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நான் முதல்வர் ஆக இருந்தபோதுதான் 1989ம்ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களையே ஆரம்பித்தேன்.
திமுக ஆட்சிக் காலத்தில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 969 மகளிர் சுய உதவிக் குழுக்கள்இருந்தன. ஆனால் நாங்கள் இவர்களை அரசியல் வேலைக்கு பயன்படுத்தவில்லை.
ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களைஅதிமுகவினர் தங்களது வசதிக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தக் குழுக்களைக் கலைக்க மாட்டோம். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அரசுடன் மட்டும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுதான்இந்தக் குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது.
அவர்களுக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்கச் செய்ய மத்திய அரசு மூலம் முயற்சிசெய்வோம். எனவே இந்த பொய் பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம்.
திமுக பல நேரங்களில் விழுந்து இருக்கிறது. ஆனால் விதையாகத்தான்விழுந்திருக்கிறது. சுனாமியே வீசினாலும் கூட இந்த சுய மரியாதை இயக்கத்தைஎவனாலும் வீழ்த்த முடியாது என்றார் கருணாநிதி.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications