காங். போட்டி வேட்பாளர்களை மடக்க வரும் கர்நாடக குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை சமாதானப்படுத்த 16 பேர் கொண்ட குழுதமிழகம் வரவிருப்பதாக மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி என்றாலே வித்தியாச காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. இந்தமுறைதேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத பலரும் கட்சியின் அதிகாரப்பூர்வவேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களை மாநில நிர்வாகிகளால் அடக்க முடியவில்லை. இதையடுத்து வீரப்பமொய்லி முயன்று பார்த்தும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ்கட்சியின் இளைய தலைவரும், அதிரடி அரசியல் பேர்வழியுமான சிவக்குமாரைகளமிறக்குகிறது காங்கிரஸ்.

தேவே கெளடாவுக்கு எதிராக தீவிரமான அரசியல் செய்யும் சிவக்குமார் முன்னாள்கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் சிஷ்யர்.

காங்கிரஸ்-தேவே கெளடா கூட்டணியை உடைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிபறிபோகக் காரணமாக இருந்தவர்களில் சிவக்குமாரும் ஒருவர்.

கெளடாவுக்கு சிவக்குமாரைக் கண்டாலே வேப்பங்காய் மாதிரி. கெளடாவின் பண,ஆள், ஜாதி பலத்தை அதே ஜாதி, பண, ஆள் பலத்தைக் கொண்டு சமாளிக்கும் திறன்படைத்தவர் சிவக்குமார்.

அதிரடி அரசியலுக்குப் பேர் போன சிவக்குமாரைத் தான் இப்போது தமிழக காங்கிரஸ்அதிருப்தியாளர்களை சமாளிக்கக் கூட்டி வரவுள்ளார் வீரப்ப மொய்லி.

ஓரளவுக்கு நன்றாகவே தமிழ்ப் பேசத் தெரிந்த சிவக்குமாரும், அவருடன் தமிழ்ப் பேசத் தெரிந்த காங்கிரஸ்தலைவர்களும் வரவுள்ளனர்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி பேசுகையில்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டிவேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்து கண்காணிக்க கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர்சிவக்குமார் தலைமையில் 16 பேர் கொண்ட குழு தமிழகம் வருகிறது. இந்தக்குழுவினர் போட்டி வேட்பாளர்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்துவார்கள்.

அதன் பிறகும் அவர்கள் வாபஸ் பெறாவிட்டால் அந்த வேட்பாளர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.

சோனியா காந்தியின் தமிழக விஜயம் வெற்றிகரமாக அமைந்தது. அவர்மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ளார். மீண்டும் தமிழகத்தில் மே முதல் வாரம் அவர்பிரசாரம் செய்ய வருவார்.

அவர் வரும் இடம், தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+