சிங்கம்-சிறுத்தை: சிக்கலாகும் கருணாநிதி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாதிகள் குறித்து தேவையில்லாத கருத்துக்களைக் கூறி தென் தமிழகத்தில் ஜாதிமோதல் ஏற்பட வழி செய்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று பாஜக பொதுச்செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடாமல்அதிமுகவினர் தடுத்ததைக் கண்டித்து கருணாநிதி பேசுகையில், நாட்டில் சிறுத்தைகள்(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிப்பிட்டு) நடமாடலாம், ஆனால் சிங்கங்கள்(பார்வர்ட் பிளாக்கின் சினனம்) நடமாடக் கூடாதா என்று கேட்டிருந்தார்.

இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்திருந்தார். மதுரையில்நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கருணாநிதியின் பேச்சு ஜாதிமோதலுக்கு வழி வகுக்கும். முக்குலத்தோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையேமோதல் ஏற்பட அவர் தூண்டுகிறார் என்று கூறியிருந்தார்.

வைகோவின் குற்றச்சாட்டு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் கருணாநிதியிடம்கேட்டபோது,

மிருக ஜாதிக்குள் (சிங்கம், புலி) மோதல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்என்று பதில் தந்தார்.

கருணாநிதியின் இந்தக் கருத்துக்கும் வைகோ, தனக்கு வசதியாக ஒரு அர்த்தம் பூசிகடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள ஜாதிகள் என்னமிருக ஜாதிகளா, அங்கு வசிப்பவர்கள் மிருகங்களா என்று கேட்டுள்ளார் வைகோ.

பாஜக எதிர்ப்பு:

இந் நிலையில், பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா விடுத்துள்ள அறிக்கையில்,

சிறுத்தைகள் உலா வரலாம், சிங்கங்கள் உலவக் கூடாதா என்று அவருக்கே உரியதந்திர மனப்பான்மையுடன் தென் தமிழ்நாட்டில் ஜாதி மோதலை ஏற்படுத்துகின்றவிதத்தில் கருணாநிதி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசு ரகசியங்களைவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தருவதாக சொல்லித்தான் காங்கிரஸ் ஆதரவுஅரசால் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சிங்கங்கள் உலா வரலாம் என்று சொன்னால் புலிகளும் உலா வரலாம் என்று சொல்லிவிடுதலை புலிகளை ஆதரிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? (அடடா, இவர்வைகோவுக்கெல்லாம் வைகோ)

பாஜகவைப் பொறுத்தவரை தமிழகம் மனிதர்கள் நடமாடும் அமைதிப் பூங்காவாகஇருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழகத்தை காட்டு மிருகங்கள் உலாவரும் கூடாரமாக திமுக ஆக்கி விடக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் ராஜா.

குப்தாவிடம் அதிமுக புகார்:

அதே போல, ஜாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசிய கருணாநிதி தேர்தலில்போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக வழக்கறிஞர் அணியினர்தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை நேரில் சந்தித்து புகார்கொடுத்துள்ளனர்.

போலீசில் புகார்:

இதற்கிடையே ஜாதி மோதலைத் தூண்டும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிபேசியிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னைமைலாப்பூர் காவல் நிலையத்தில் ஜெபமணி ஜனதாக் கட்சி (இப்படி ஒரு கட்சிஇருக்குது தெரியுமா?) வேட்பாளர் மோகன்ராஜ் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

மைலாப்பூர் தொகுதியில் ஜெபமணி ஜனதாக் கட்சியின் வேட்பாளராகப்போட்டியிடும் மோகன்ராஜ் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,

கருணாநிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், மிருக ஜாதிக்குள் மோதல் ஏற்பட்டால் நான்என்ன செய்ய முடியும் என பதிலளித்துள்ளார்.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையையும், கலவரத்தையும்தூண்டும் வகையில் கருணாநிதி பேசியுள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கும்படிதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கும் தந்தி அனுப்பியுள்ளேன் என்றுமோகன்ராஜ் கூறியுள்ளார்.

திருமாவும் கோபம்:

இந் நிலையில் திட்டக்குடியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவன்,

முதல்வர் ஜெயலலிதா முக்குலத்தோரையும் தாழ்த்தப்பட்டவர்களையும்அங்கீகரித்துள்ளார். ஆனால், கருணாநிதியோ இந்த இரு ஜாதிகளுக்கு இடையேமோதலை ஏற்படுத்துகிறார். ஆட்சியைப் பிடிக்க வன்முறையை நம்புகிறார்கருணாநிதி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+