வெற்றி சிகரத்தை நோக்கி திமுக: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படாது என்றுகருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.எல்லீஸ்புரத்தில் தொடங்கிய அவரது பிரசாரம் பல்வேறு தெருக்களின் வழியாகசென்றது.

பிரசாரத்தில் கருணாநிதி பேசுகையில், திமுக கூட்டணி வெற்றியின் சிகரத்தை நோக்கிநகர்ந்து கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத சிலர் தவறான பிரசாரங்களில்இறங்கியுள்ளனர்.

பெண்களிடத்திலே அவர்கள் நடத்துகின்ற பிரசாரம், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர்சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்பது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் முதல்வர் ஆக இருந்தபோதுதான் 1989ம்ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களையே ஆரம்பித்தேன்.

திமுக ஆட்சிக் காலத்தில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 969 மகளிர் சுய உதவிக் குழுக்கள்இருந்தன. ஆனால் நாங்கள் இவர்களை அரசியல் வேலைக்கு பயன்படுத்தவில்லை.

ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களைஅதிமுகவினர் தங்களது வசதிக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தக் குழுக்களைக் கலைக்க மாட்டோம். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அரசுடன் மட்டும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுதான்இந்தக் குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது.

அவர்களுக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்கச் செய்ய மத்திய அரசு மூலம் முயற்சிசெய்வோம். எனவே இந்த பொய் பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம்.

திமுக பல நேரங்களில் விழுந்து இருக்கிறது. ஆனால் விதையாகத்தான்விழுந்திருக்கிறது. சுனாமியே வீசினாலும் கூட இந்த சுய மரியாதை இயக்கத்தைஎவனாலும் வீழ்த்த முடியாது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+