கார்த்திக் கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
மதுரை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளருக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அதிமுகவினரிடமிருந்து கடும்மிரட்டல் வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கார்த்திக் குடும்பத்தினரையேஅதிமுகவினரும் மதுரை ஆதீனமும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாகத்தர வேண்டும் என்று காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந் நிலையில் சோழவந்தான் தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அம்மாவாசைக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தன்னை சிலர் தொடர்பு கொண்டு போட்டியிலிருந்து விலகுமாறு கூறிமிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சோழவந்தான் தொகுதி தேர்தல்அதிகாரி சுப்ரமணியத்திடம் அம்மாவசை புகார் கொடுத்தார்.
அதன் மீது விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, வேட்பாளர் அமாவாசைக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு பரிந்துரைத்தார்.இதைத் தொடர்ந்து அமாவாசைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதம் பிரசாரம் செய்து வருகிறார்அமாவாசை.












Click it and Unblock the Notifications