வீட்டில் ஒருவருக்கு வேலை: ஜெ மீண்டும் உறுதி
திருச்சி:
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் வேனில் இருந்தபடியே பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பேசினார்.அதன் விவரம்:என் அன்புக்குரிய நீங்கள் கடந்த 2001ம் ஆண்டில் அள்ளித் தரும் வள்ளல்களாக எனக்கு பேராதரவைத்தந்தீர்கள். நீங்கள் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை. உங்கள்நம்பிக்கையை செயல்படுத்துவதே என் ஆட்சியின் லட்சியமாகக் கொண்டு கடமையாற்றினேன்.
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செய்த பணிகள் இன்று சாதனைகளாக பரிணமித்து நிற்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பலமுறை டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியபோதும் பஸ்கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பஸ் சேவை தமிழகத்தில் தான்உள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும். 32 லட்சம் வேலை வாய்ப்புக்களைஉருவாக்கித் தருவோம். கடந்த தேர்தலில் தந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டித்தான் உங்கள் அன்புச்சகோதரியான நான் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கிறேன்.
உங்களோடு தான் அன்புச் சகோதரியான நான் கூட்டணி வைத்துள்ளளேன். இது ஜனநாயக மக்கள் கூட்டணி.என் விலாசமே நீங்கள் தான். இன்னொரு பொற்காலத்தை உருவாக்க மீண்டும் உங்கள் பேராதரவைத் தாருங்கள்என்றார் ஜெயலலிதா.
பிரசாரத்திற்கு வருகிறார் காளிமுத்து:
இதற்கிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வரும் மாஜி சபாநாயகர் காளிமுத்து 3 நாள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதிமுகவின் முக்கிய பிரசாரப் பீரங்கியாக செயல்படும் வகையில், காளிமுத்து தனது சபாநாயகர் பொறுப்பிலிருந்து விலகி அதிமுக அவைத் தலைவரானார்.ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் நலம் சரியாகி வீடு திரும்பிய காளிமுத்து, மறுபடியும் உடல் நலம் குன்றி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது வீடு திரும்பி ஓய்வில்இருந்து வருகிறார்.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்ட காளிமுத்து, உடல் நலனைக் கருதிபோட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது பிரசாரத்திற்கு வரவுள்ளார் காளிமுத்து.
வரும் 29ம் தேதி மதுரை மாவட்டத்திலும், மே 1ம் தேதி சிவகாசி தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும்காளிமுத்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.












Click it and Unblock the Notifications